கனடிய தமிழர் தேசிய அவைக்கு மார்ச் 27ல் கனடா தழுவிய தேர்தல்
- இவ் விடயம் 13. 01. 2010, (வெள்ளி),தமிழீழ நேரம் 19:59க்கு பதிவு செய்யப்பட்டது
- புலத்தமிழர், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்
கனடா தமிழர் வாக்களித்து, போட்டியிட்டு சனநாயக வழியில் தெரிவு செய்யும் கனடிய தேசிய அமைப்பு தமிழர் அனைவரையும் இணைக்கும் பெருமுயற்சியாக அனைத்து தமிழருக்கும் வாக்கு பெண்கள், இளையவர்களுக்கு குறைந்தபட்சம் 20சதவீத ஆசனங்கள் ஒதுக்கீடு 16 வயதிற்கு மேற்பட்ட தமிழை தாய் மொழியாக கொண்ட அனைவரும் வாக்களிப்பர்.
வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீளுறுதி செய்வதற்கான வாக்குக்கணிப்பில் கனடா வாழ் ஈழத்தமிழ் மக்கள் பெருவாரியாக ஆம் என அளித்த வாக்கைத் தொடர்ந்து, ஈழத்தமிழ் மக்களின் அவ் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும்; வகையிலும், கனடா வாழ் தமிழ் மக்களின் வாழ்வியலை கனடாவில் வலுப்படுத்தும் வகையிலும், கடந்து அமையக்கூடிய சர்வதேச தமிழர் கட்டுமானங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் அமையக் கூடிய கனடிய தமிழர் தேசிய அவை ஒன்றை சனநாயக வழியல் கனடா தமிழ் மக்கள் தாமே வாக்களித்து, போட்டியிட்டு கனடா தழுவி தெரிவு செய்தற்கான தேர்தல் வரும் மார்ச் மாதம் 27ஆம் நாள் சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக கனடிய தமிழர் தேசிய அவை தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக தேசிய அவைக்கான யாப்பு மக்கள் பார்வைக்காக வெளியிடப்படவுள்ளது. பெப்பிரவரி மாதம் 7ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை வரை மக்கள் கருத்துக்கள் நேரடி சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள், கடிதங்கள், மின்அஞ்சல்கள் மூலம் பெறப்படும் எனவும், அக்கருத்துக்கள் யாப்பு வரைவு விசேட குழுவிடன் சமிர்பிக்கப்பட்டு இக்குழு இறுதி யாப்பை பெப்பிரவரி மாதம் 15ஆம் நாள் வெளியிடும் எனவும், தேர்தல் ஒருங்கிணைப்புக்குழ மேலும் அறிவித்துள்ளது.
வுரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ் யாப்பில், கனடாவில் பெருவாரியாக வாழும் ஈழத்தமிழ் மக்களுடன், கனடாவில் வாழும் ஏனைய நாடுகளில் இருந்தான தமிழ் பேசும் மக்களையும் இத் தேசிய சபையில் உள்வாங்குவன் மூலம் தமிழ் மக்கள் அனைவரையும் ஒண்றினைக்கும் பெரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அத்துடன் பெண்கள், இளையவர்களுக்கு குறைந்தபட்சம் 20சதவீத ஆசனங்கள் தேசிய சபையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 16 வயதிற்கு மேற்பட்ட தமிழை தாய் மொழியாக கொண்ட அனைவரும் இவ் வாக்களிப்பில் மற்றும் தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் வழங்கப்படுதல் போன்ற பல முன்னேற்றகரமாக விடயங்கள் இணைக்கப்பட்டுள்ளதாவும், தேர்தல் ஒருங்கிணைப்புக்குழ தெரிவித்துள்ளது. அதேவேளை கனடிய வௌ;வேறு மாநிலங்களில் வாழ்பவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் பிராந்திய பட்டியல் ஒன்றும் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
கனடிய தமிழர் தேசிய அவைக்கான தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற வேட்பாளர்கள் இறுதி வடிவமாக வெளியிடப்படும் யாப்பை முழுமையாக ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் பேப்பிரவரி 16ஆம் நாள் முதல் வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியும் எனவும், பெப்பரவரி 28ஆம் நாள் வேட்புமனு தாக்கல் செய்தற்கான இறுதி நாள் எனவும், தேர்தல் விதிகளுக்கு அமைய ஏற்றுக் கொள்ளப்பட்ட வேட்பாளர்கள் அடுத்துவரும் 1நான்கு வாரங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடலாம் எனவும், மார்ச் 27ஆம் நாள் சனிக்கிழமை கனடிய தமிழர் தேசிய அவைக்கான தேர்தல் கனடா தழுவி நடைபெறும் எனவும் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழ மேலும் அறிவித்துள்ளது.
இச் சனநாயகத்தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் மக்கள் அவை, கனடாவில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புக்களையும் இணைத்து, கனடிய தமிழர்களின் உள்ளுர், மற்றும் சர்வதேச அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு செயற்பாடுகளை வலுப்படுத்துகின்ற செயற்பாடுகளை தொடர்ந்தும் உறுதியுடன் முன்னெடுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான கனடா தழுவிய வாக்குக்கணிப்பை சிறப்புற நடாத்தித்தந்த பக்கச்சார்பற்ற, நீதியான கனடிய தமிழர் தேர்தல் அமைப்பான, தமிழர் தேர்தலுக்கான கனடிய கூட்டடைப்பே இத்தேர்தலையும் நடாத்த வேண்டப்பட்டதாகவும், அதனை அவ்வமைப்பு ஏற்று இத் தேர்தலுக்கான பூர்வாங்க வேலைகளை ஆரம்பித்துள்ளதாகவும், தேர்தல் ஒருங்கிணைப்புக்குழ மேலும் அறிவித்துள்ளது.
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
One Comment on “கனடிய தமிழர் தேசிய அவைக்கு மார்ச் 27ல் கனடா தழுவிய தேர்தல்”
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!



டியர் சார்,
கனடா வில் பிரஸ்ட் செலக்ட் ஒன் தலைவர் போர் ஸ்ரீலங்கன் ப்ரோப்லேம் டு சொல்வே தென் ஹி வில் ரேப்றேசென்த்ஸ் யுவர் க்ரிவேன்செஸ் இன் கேநேவிய தென் ஒன்லி வி ஆல் கெட் குட் ரேசெல்ட் போர் ஸ்ரீலங்கன் பாப்லஸ்.ட்ரை ட்ரை ட்ரை ட்ரை தில் யுவர் எண்டு.