இந்திய தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மகிந்த உதவி செய்திருந்தார்: வீரதுங்கா

கடந்த வருடம் நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சா இந்திய காங்கிரஸ் கட்சிக்கு உதவிகளை மேற்கொண்டிருந்தார் என சிறீலங்கா அரச தலைவரின் செயலாளர் லலித் வீரதுங்கா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இணையத்தளம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த வருடம் மே மாதம் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது வன்னியில் நடைபெற்ற போரில் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்ற அறிவித்தலை விடுத்து மகிந்த ராஜபக்சா இந்திய காங்கிரஸ் கட்சிக்கு உதவி புரிந்திருந்தார்.

தேர்தல் காலத்தில் போரை நிறுத்தும் படி இந்தியா சிறீலங்காவை கேட்டிருந்தது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சிறீலங்கா அரசு கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என அறிவித்தலை விடுத்திருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்திய அரசும் சிறீலங்கா அரசும் இணைந்து இந்திய மக்களை ஏமாற்றும் நாடகங்கையே மேற்கொண்டதாகவும், வன்னியில் நடைபெற்ற போரின் போது எந்த ஒரு கணமும் சிறிலங்கா அரசு தனது கனரக ஆயுதங்களின் பாவனைகளை நிறுத்தவில்லை என படைத்துறை அவதானிகள் தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Copyright © 2010 நெருடல். All rights reserved.