அரச ரகசியங்களை அம்பலப்படுத்தி விடுவேன்

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த மீண்டும் வெற்றி கொண்டபின்னர், எதிர்வேட்பாளரான சரத் பொன்சேகாவை அவர் படாதபாடுபடுத்தி வருகிறார். சரத்தை வீட்டுக் காவலில் வைத்தது, அவருக்குக் கொடுத்த பாதுகாப்பை வாபஸ் பெற்றது, நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதித்தது போன்ற பல தொல்லைகளை அரசு கொடுத்து வருவது தெரிந்ததே.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை மாலை பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய சரத் பொன்சேகா, அரசாங்கம் தொடர்ந்தும் தனக்குத் தொல்லை கொடுத்துவந்தால் தாம் பேசாமல் இருக்க மாட்டேன் என்றும், அரச ரகசியங்களை அம்பலப்படுத்தி விடுவேன் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அரச ரகசியங்களுக்கான ஆவணங்கள் தமது கைகளில் இப்போதும் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Copyright © 2010 நெருடல். All rights reserved.