சரணடைந்த புலிகளின் தலைவர்கள் படுகொலை சம்பவத்தை நேரில் கண்ட ஊடகவியலாளர் குற்ற புலனாய்வுதுறையினரால் கைது!

சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவின் உத்தரவின் பேரில் சிறிலங்கா இராணுவத்தின் 58 ஆவது டிவிஷன் படையணி தளபதி சவீந்திர டி சில்வா படுகொலை செய்ய கட்டளையிட்டார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு தகவல் தெரிவித்த சிங்கள ஊடகவியளாரை சிறிலங்கா குற்ற புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர்.

அரச தலைவர் தேர்தல் முடிவடைந்த பின்னர், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி வழங்கவேண்டாம் என்று சிறப்பு அறிவித்தலுடன் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியல் ஒன்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் குடிவரவு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இந்த பட்டியலில் மேற்படி ஊடகவியலாளரின் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இதனைஅடுத்து, குறிப்பிட்ட ஊடகவியலாளரை தேடி அனுப்பப்பட்ட குற்ற புலனாய்வு பிரிவின் விசேட குழுவினர் அவரை கடந்த வெள்ளியன்று இரவு கைது செய்துள்ளனர். அரசதலைவர் மகிந்தவின் ஆட்சியை இராணுவ புரட்சி ஒன்றின் மூலம் கவிழ்க்க திட்டமிட்ட பொன்சேகா தலைமையிலான குழுவினரின் பேச்சாளராக கடமையாற்றும் பொறுப்பு பொன்சேகா தரப்பினரால் இந்த ஊடகவியலாளருக்கே வழங்கப்பட்டிருந்தது என்று குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் 58 டிவிஷன் படையினரிடம் வெள்ளை கொடியுடன் சென்று சரணடைந்த விடுதலை புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் உட்பட நடேசனின் மனைவி உட்பட பலர் படுகோலை செய்யப்பட்டதை குறிப்பிட்ட சிங்கள ஊடகவியலாளர் நேரில் கண்டதாகவும் சரணடைவதற்கு வரும் விடுதலை புலிகள் எவரையும் ஏற்றுக்கொள்ளவேண்டாம் என்று டிவிஷன் தளபதி சவீந்திர டி சில்வாவுக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய தொலைபேசியில் அறிவுறுத்தியிருந்தார் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tell a Friend
நெருடல் நிர்வாகத்தின் ஓர் அன்பான வேண்டுகோள்
 
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும். கீழுள்ள இந்த இணையத்தை பாவித்து ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதலாம்.
 

நன்றி

கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Spam Protection by WP-SpamFree

Copyright © 2010 நெருடல். All rights reserved.