சுதந்திர தமிழீழ தனியரசை நிறுவுவதற்கு 99.33% பிரித்தானியாவாழ் தமிழ்மக்கள் விருப்பம் தெரிவிப்பு.
-
இவ் விடயம் 01. 02. 2010, (ஞாயிறு),
தமிழீழ நேரம் 18:22க்கு பதிவு செய்யப்பட்டது
- செய்திகள்
நேற்றும் நேற்றுமுன்தினமும் பிரித்தானியா முழுவதும் நடைபெற்ற வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கமைவாக சுதந்திர தமிழீழத் தனியரசுக்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பின் முடிவுகள் நேற்று (31-01-2010) மாலை வெளியானது.
பிரித்தானியாவின் தலைநகர் லண்டன் மையப்பகுதியில் அமைந்துள்ள அமைந்துள்ள Park Lane நட்சத்திர விடுதியில் 31-01-2010 இரவு உத்தியபூர்வமாக ஊடகவியளார், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் , மற்றும் பார்வையாளர் முன்னிலையில் தேர்தல் குழுவினரால் அறிவிக்கப்பட்டது.
இதில் 99.33 வீதமான பிரித்தானியாவாழ் தமிழ்மக்கள் இறைமையுள்ள தனித் தமிழீழ அரசினை நிறுவுவதற்கு தமது விருப்பத்தை தெரிவித்து புதியதோர் வரலாறு படைத்துள்ளனர்.
பிரித்தானியா முழுவதும் வாக்களித்த 64,692 வாக்காளர்களில் 64,256 வாக்காளர்கள் தனித் தமிழீழ அரசினை நிறுவுவதற்கு ஆம் என்றும் 185 வாக்காளர்கள் இல்லை என்றும் 251வாக்குகள் செல்லுபடியாகாத வாக்குகளாகவும் பதிவாகியுள்ளன.
இதன் படி வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின் அடிப்படையில் இறைமையுள்ள தனித் தமிழீழ அரசினை நிறுவுவதற்கு 99.33% வீதமான மக்கள் ஆம் என்றும் 0.29% வீதமான மக்கள் இல்லை என்றும் வாக்களித்ததுடன் 0.38% வீதமான வாக்குகள் செல்லுபடியாற்றதாக பதிவாகியுள்ளதாக தேர்தல்குழு தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
|
நெருடல் நிர்வாகத்தின் ஓர் அன்பான வேண்டுகோள்
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை
தமிழில் எழுதவும். கீழுள்ள இந்த இணையத்தை பாவித்து ஆங்கில
உச்சரிப்பில் தமிழில் எழுதலாம்.
நன்றி |
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

