அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் அடுத்தவாரம்
- இவ் விடயம் 03. 03. 2010, (வியாழன்),தமிழீழ நேரம் 5:02க்கு பதிவு செய்யப்பட்டது
- செய்திகள்
சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தோ்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும், அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் ஒன்று அடுத்த வாரத்தில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பெப்ரவரி 9 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. ஏப்ரல் 8 ஆம் திகதி பொதுத் தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான நியமனப் பத்திரங்களும் கோரப்பட்டடுள்ளன.
இந்த நிலையிலேயே அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையை நிறைவேற்றுவதற்காக அடுத்த வாரம் நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்துவதற்கான அறிவித்தலை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச வெளியிடவுள்ளார்.
அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான பிரகடனத்தில் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று திங்கட்கிழமை இரவு கைச்சாத்திட்டதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறாத நிலையில் அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கான பிரேரணையை வெளியிடும் அதிகாரம் அரசுத் தலைவருக்கு இருக்கின்ற போதிலும், பத்து நாட்களுக்குள் அதற்கான அங்கீகாரத்தை நாடாளுமன்றத்தில் அவர் பெற்றுக்கொள்ள வேண்டும்.
நாடாளுமன்றத்துக்கான பொதுத் தோ்தல் ஏப்ரல் 8 ஆம் திகதி நடைபெறவிருப்பதால் புதிய நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் ஏப்ரல் 22 ஆம் திகதி அரசுத் தலைவரால் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
One Comment on “அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் அடுத்தவாரம்”
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!



அப்படி என்ன கூட்டம் கூடி கிழிக்க போயினம். இப்பவே ஸ்ரீ லண்கவிண்ட கடன் அவிண்ட GDP இலும் பார்க்க கூட. பாவம் பசுக்கள் இவையள் அவசரமா கூடி எப்படி எலெக்சன இப்ப ஈசியா வெல்லலாம் என்றும் மற்றும் பண்டிசேகா, கள்ளகருணா, வெள்ளைவான் டக்லஸ் போன்றவர்களையும் தூக்கி சுத்தமாக இறையபக்சவின் குடும்பத்தின் கைக்குள் ஸ்ரீ பார்சி நேரு குடும்பம் இந்தியாவில் செய்தது போல் முழு தீவையும் கொண்டுவர முற்படுகிறார்கள். அப்படி செய்துவிட்டு கைபொம்மை ரணிலை வைத்து சூக்காடலாம் மற்றும் சவுண்ட் வன்மையன்சாவையும் வைத்து ஷோக்காட்டினால் ஸ்ரீ லங்கா ஆட்டு மந்தைகள் பார்த்துக்கொண்டிருக்கும்.
இவையள் இப்ப நல்லா திணறினம்!!!! இவையள் முதல் நானூறு மில்லியன் டாலர் கடன் வாங்கிப்போட்டு ஐ.எம்.எப் இடம் கட்டாயம் தமது குடும்ப கொழுத்த அரசாங்கத்தில் 40 விகிதத்தை வெட்டுவோம் என்று சத்தியம் செய்தவர்கள். அது தான் அடிச்சு பிடிச்சு இலக்சனை வைச்சிட்டு பிறகு அரசாங்க உத்தியோகத்தில் திளைத்திருக்கும் பல்லாயிரம் பேர் தூக்கி எறியப்படப்போகிரார்கள். அப்போது தான் இராஜ பக்ச குடும்பம் மற்றைய 500 மில்லியனை வாங்கி அமுக்கலாம். ஸ்ரீ லங்கா சன நாயக வார்த்தையில் சொன்னால் மக்களுக்கு “சேவை” செய்ய பெறப்பட்டபணம்!!