சரத் பொன்சேகாவிற்கு எதிரான இராணுவ நீதிமன்றம் விரைவில் நிறுவப்படும்: இராணுவத் தளபதி
- இவ் விடயம் 03. 03. 2010, (வியாழன்),தமிழீழ நேரம் 11:36க்கு பதிவு செய்யப்பட்டது
- செய்திகள்
ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிரான இராணுவ நீதிமன்றம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை நிறுவப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிரான சாட்சி திரட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமக்குக் கிடைக்கப் பெற்ற தரவுகள் மற்றும் இராணுவ சட்டப் பிரிவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ நீதிமன்றில் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!


