ஜே.வி.பி அரசு அமைக்கும் போதே பொன்சேகா விடுதலை செய்யப்படுவார்: சோமவன்சா
- இவ் விடயம் 05. 03. 2010, (வியாழன்),தமிழீழ நேரம் 17:00க்கு பதிவு செய்யப்பட்டது
- செய்திகள்
ஜே.வி.பி அரசு ஒன்றை அமைக்கும் போதே ஜெனரல் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என ஜே.வி.பியின் தலைவர் சேமவன்சா அமரசிங்கா நேற்று தெரிவித்துள்ளார்.
நேற்று (4) ஜே. ஆர் ஜெயவர்த்தனா மையத்தில் நடைபெற்ற ஜனநாயக தேசிய முன்னனி உறுப்பினர்களின் பதவிப்பிரமாண வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஜெனரல் பொன்சேகா ஒரு அரசியல் கைதியாகவே உள்ளார். நாம் அரசு அமைத்ததும் அவரை விடுதலை செய்வோம். உண்மையான வீரன் பொன்சேகா தான். அவரால் தான் நாம் இன்று பயமின்றி வாழ்கிறோம்.
டிஎன்ஏ தான் தூய்மையான முன்னனி, நாம் ஒரு குறுகிய காலத்திற்குள் அதனை அமைத்துள்ளோம். தேர்தலில் தற்போது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். நாம் தேர்தலில் வெற்றி பெறுவோம். பரந்தளவில் கட்சிகளை ஒருங்கிணைத்து நாம் அரசு ஒன்றை நிறுவுவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே குடும்ப அரசியல், ஊழல், லஞ்சம் போன்றவற்றை எதிர்த்து போரடுவதுடன், நாட்டில் ஜனநாயகம், ஊடகச்சுதந்திரம், கருத்துச்சுதந்திரம் எனபவற்றை ஏற்படுத்த போராடப்போவதாக அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் மதியம் பொன்சேகாவை சந்தித்ததாகவும், அவரின் விருப்பமும் அதுவே என தெரிவித்துள்ள அனோமா எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரங்களை எல்லா மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!


