தமிழக முதல்வர் தலைமையிலான தமிழகம் எம்முடன் இருக்கின்றது – சிறிலங்கா அமைச்சர்
-
இவ் விடயம் 09. 03. 2010, (ஞாயிறு),
தமிழீழ நேரம் 20:09க்கு பதிவு செய்யப்பட்டது
- செய்திகள்
மேற்குலக நாடுகளின் அழுத்தங்கள் குறித்து இன்று பேசுகின்றோம். ஆனால் ஒரு காலத்தில் இந்தியாவிலிருந்தும் தமிழ் நாட்டிலிருந்தும் தான் எமக்கு அதிகமான அழுத்தங்கள் வந்தன. ஆனால் முதல்வர் தலைமையிலான தமிழகமும் இந்தியாவும் எம்முடன் இருக்கின்றன என்று சுற்றாடல் இயற்கை வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது இன்று சில மேற்குலக நாடுகள் எமக்கு எதிராக செயற்பட்டுவருகின்றன. இவ்வாறான சதித்திட்டங்களுக்கு எதிராக எதிர் வரும் எட்டாம் திகதி இந்த நாட்டு மக்கள் பதிலளிப்பார்கள். ஒருகாலத்தில் இந்தியாவிலிருந்தும் தமிழகத்திலிருந்தும் இலங்கைக்கு பாரிய அழுத்தங்கள் வந்தன. அவற்றை சமாளிப்பது குறித்து நாங்கள் சிந்தித்து வந்தோம்.
ஆனால் இன்று தமிழக முதல்வர் தலைமையிலான தமிழகம் எம்முடன் இருக்கின்றது. இந்திய மத்திய அரசாங்கம் இலங்கைக்கு ஆதரவாக உள்ளது. எனவே இந்தியா மற்றும் தமிழகத்தின் அழுத்தங்களை சமாளித்த எங்களுக்கு மேற்குலக நாடுகளின் அழுத்தங்களை சமாளிக்க முடியும். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை அல்லது வேறு எந்தப் பிரிவிலும் இலங்கைக்கு எதிராக ஏதாவது யோசனைகள் கொண்டு வரப்பட்டால் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இலங்கை தோற்கடிக்கும்.
சீனா ரஷ்யா, இந்தியா, தென்னாபிக்கா போன்ற நாடுகள் எமக்கு ஆதரவாக உள்ளன என்று சுற்றாடல் இயற்கை வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையில் கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் இடம் பெறவேண்டிய காலம் வந்துள்ளது. அது தொடர்பில் ஏற்கனவே ஆராயப்பட்டு வருகின்றது. ஐ.நா.வுக்கு எந்தவொரு நாட்டினதும் உள்விவகாரங்களில் தலையிட முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது ஐக்கிய நாடுகள் சபையில் தற்போதைய நிலைமையில் கட்டமைப்பு ரீதியான மாற்றம் தேவைப்படுகின்றது. இது செய்யப்பட வேண்டிய விடயமாக உள்ளது. இன்று ஐக்கிய நாடுகள் சபையின் பல முகவர் நிறுவனங்கள் மேற்கு நாடுகளிலிருந்து வெளியில் செல்ல ஆரம்பித்துள்ளன.
விரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருக்கான தேர்தல் இடம் பெறவுள்ளது. இதில் நியூஸிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க்கை வெற்றி பெறவைப்பதற்கு முயற்சிகள் இடம்பெறு கின்றன. எனவே ஆசிய நாடுகள் எதிர்வரும் காலங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து விடயங்களுக்கும் முழுமையான ஆதரவை வழங்குமா என்பது கேள்விக்குறியாகும்.
இன்று ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் உள்ள சில நாடுகள் வீட்டோ அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றன. இது தடுக்கப்படவேண்டும். எனவே ஐ.நா. வின் கட்டமைப்பில் மாற்றம் தேவை என்கிறோம். மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளில் அதிகமானவற்றின் ஆதரவு இலங்கைக்கு உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை அல்லது வேறு எந்த பிரிவிலும் இலங்கைக்கு எதிராக ஏதாவது யோசனைகள் கொண்டுவரப்பட்டால் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் தோற்கடிப்போம்.
ஏற்கனவே ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும் பான்மை பலத்தினால் தோற்கடித்தோம். மேலும் உறுப்பு நாடு ஒன்றின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட முடியாது. அவ்வாறு தலையிடுவது ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறும் செயலாகும்.
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
3 Comments on “தமிழக முதல்வர் தலைமையிலான தமிழகம் எம்முடன் இருக்கின்றது – சிறிலங்கா அமைச்சர்”
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!





முப்பது வருசமா எங்களுக்கு தெரிஞ்சத இப்ப வந்து சொல்லுறார். அவருக்கு நாங்கள் பேரை தமிழ் கொலைஞர் என்று மாற்றிவிட்டோம், தெரியாதா?
இவன்கள் எல்லாரும் கூட்டுக் களவாணிப் பயல்கள் என்பதைக் கருணாய் ௨ மணி நேர உண்ணா நோன்பு இருந்தபோதே அறிந்து கொண்டோம்.
இப்போது வேலிக்கு ஓணான் சாட்சி சொல்கிறது : தமிழக முதல்வர் தலைமையிலான தமிழகம் எம்முடன் இருக்கின்றது – சிறிலங்கா அமைச்சர்.
இவன்களுக்குச் சாவே வராதா?
ரவி அண்ணா, “கருணாய்” மிகவும் பொருத்தமான தலைப்பு! “கொலைஞர் கருணாய்”