ஜே.வி.பியை 1989 ஆம் ஆண்டு அழித்தவர் பொன்சேகாவே என்பதை அந்த கட்சி மறந்துவிடக்கூடாது: விமல் வீரவன்சா
-
இவ் விடயம் 10. 03. 2010, (ஞாயிறு),
தமிழீழ நேரம் 5:20க்கு பதிவு செய்யப்பட்டது
- செய்திகள்
ஜே.வி.பியை 1989 களில் அழித்ததில் ஜெனரல் பொன்சேகாவுக்கும் தொடர்புகள் உண்டு என்பதை ஜே.வி.பி மறந்துவிடக்கூடாது என ஜாதிக நிடகாஸ் பெரமுனை கட்சியின் தலைவர் விமல் வீரவன்சா தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு பேசும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
1988 மற்றும் 1989 காலப்பகுதிகளில் பொன்சேகா திருமலை மாவட்ட இராணுவமுகாம் பொறுப்பதிகாரியாக பதவி வகித்திருந்தார். அன்றைய காலத்தில் ஜே.வி.பியினர் மீதான நடவடிக்கையில் அவர் முக்கிய பங்கு வகித்திருந்தார்.
எனவே ஜே.வி.பி இது தொடர்பில் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். ஜே.வி.பியின் குறிப்பிட்ட சில தலைவர்களை கைது செய்த பொன்சேகா அவர்களை கந்தளாய் இராணுவ முகாமில் தடுத்து வைத்திருந்தார்.
பொன்சேகாவின் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறீலங்கா அரசை போர்க் குற்றச்சாட்டுக்களினுள் சிக்கவைக்க ஐ.நாவின் செயலாளர் நாயகம் புதிய ஒரு திட்டத்தை வகுத்துள்ளார்.
இராணுவச்சட்டங்களின் அடிப்படையில் கைது செய்யப்படுபவர்கள் வேறுவிதமாகவே நடத்தப்படுவதுண்டு. ஆனால் தற்போதைய அரசு பொன்சேகாவுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!




