தடுத்துவைக்கப்பட்டுள்ள எம் மக்களையும் போராளிகளையும் தொடர்ந்து சித்திரவதை செய்யும் இலங்கை இராணுவம் – இன்று தமிழ் நாட்டுக்கு தப்பிவந்த மூன்று பேர் தெரிவிப்பு

கடந்த வருடத்தில் தாயகத்தில் நடைபெற்ற பேரழிவு நடைபெற்று நீண்ட நாளைக்கு பின்னர் மூன்று தமிழ் அகதிகள் இந்தியாவுக்கு இன்று சென்றடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தினரின் கொடுமையான சித்திரவதைகளை தாங்கமுடியாமல் தப்பியோடி வந்ததாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமித்குமார் கஜன் தர்மசீலன் ஆகிய யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட மூன்று பேரே இவ்வாறு படகு மூலம் தமிழ்நாட்டை சென்றடைந்தனர். தமிழ்நாட்டு காவல்துறையினரின் விசாரணைகளின் பின்னர் இவர்கள் மண்டபம் முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினரின் தாங்க முடியாத சித்திரவதைகள் காரணமாகவே தாம் தப்பியோடி வந்துள்ளதாகவும், அனைத்து வகையான சித்திரவதைகளையும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் மீது மேற்கொண்டுவருவதாகவும் அவர்கள் தகவல் வெளியிட்டனர்.

இவ்வாறு சிறிலங்கா இராணுவத்தினரின் சித்திரவதைகள் இன்றுவரை தொடர்ந்துகொண்டிருப்பது தமிழ் சமூகத்திற்கும் பெரும் அச்ச உணர்வை தோற்றுவித்துள்ளது. தற்போதும் இரகசிய தடுப்புமுகாமில் 12500 தமிழ் மக்களும் போராளிகளும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடைய நிலை தொடர்பாக அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

3 Comments on “தடுத்துவைக்கப்பட்டுள்ள எம் மக்களையும் போராளிகளையும் தொடர்ந்து சித்திரவதை செய்யும் இலங்கை இராணுவம் – இன்று தமிழ் நாட்டுக்கு தப்பிவந்த மூன்று பேர் தெரிவிப்பு”

  • ambalavanan wrote on 11 March, 2010, 9:49

    அச்சம் மூன்று ஆடைகளுடன் , வீரம் , ஆடையற்று , விவேகமும் , உறுதியும் . கொண்டு ஆம் தமிழனாய்.
    தலை வணங்குவது யாம் கடவுளர்க்கு மட்டுமே,

  • thaainaattu tamizan wrote on 11 March, 2010, 18:01

    கலங்காதிரு தமிழா சிங்கள பேடிகளை பந்தாடும் காலம் வரும்

  • suvamy wrote on 11 March, 2010, 19:27

    இரக்கமே
    இல்லாததமிழ்நாடும் அதன் அரசும் ஏன்தான் தாமிழர்கல்
    அங்கு போகின்றார்காளோ தெரியவில்லை

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Copyright © 2010 நெருடல். All rights reserved.