இலங்கை அகதிகளுக்கான தடையை அவுஸ்திரேலியா நீக்கியுள்ளது
- இவ் விடயம் 06. 07. 2010, (வியாழன்),தமிழீழ நேரம் 18:36க்கு பதிவு செய்யப்பட்டது
- புலத்தமிழர்
இலங்கையிலிருந்து செல்லும் அகதிகள் குடிவரவிற்காக விண்ணப்பிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அவுஸ்திரேலிய அரசாங்கம் நீக்கியுள்ளது.
இதற்கான அறிவித்தலை அவுஸ்திரேலியப் பிரதமர் ஜுலியா கில்லர்ட் இன்றைய தினம் வெளியிட்டுள்ளார்.
இதனிடையே இலங்கை அகதிகள் விடயத்தில் நியுசிலாந்து மற்றும் கிழக்கு தீமோர் ஆகிய நாடுகளுடன் பிராந்திய இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
இதன்படி இநத இரு நாடுகளிலும் இலங்கை அகதிகளைத் தங்க வைப்பதற்கான மத்திய நிலையங்கள் நிறுவப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே இலங்கையுடன் சேர்த்து தடை விதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அகதிகளைக் கையாள்வது குறித்து இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவுஸ்திரேலியப் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!


