ஈழத் தலைமகனே!
- இவ் விடயம் 14. 06. 2009, (வெள்ளி),தமிழீழ நேரம் 21:02க்கு பதிவு செய்யப்பட்டது
- எம்மவர் படைப்புக்கள், காணொளி
“அடிமை” என்னும் விலங்கறுக்க வந்த தலைவன்
விடிவை நோக்கி பயணிக்க எழுந்த ஆதவன்
பொங்கும் கடல் தந்த ஈழத் தமிழ்மகன்- தமிழ்
வாழ வேண்டி தமிழன்னை ஈந்த தலைமகன்
ஈழ அன்னையாவருக்கும் மூத்த பிள்ளை
நாம் அழைப்போம் என்றும் எங்கள் அண்ணை”
தமிழர்க்கொரு இன்னல் என்றால் வேங்கையாவான்
தமிழீழப் பிள்ளைக்கெல்லாம் தமையனாவான்
ஈழமே மூச்சென்று என்றும் வாழ்பவன்!
எந்த இடர் வந்திடினும் சோர்ந்திடாதவன்
உறுதிகொண்ட மனங்கள் சேர்த்து படையமைத்தவன்
உலகம் வியந்துநிற்கும் வகையினிலே எமைச்சமைத்தவன்
கலங்கிடாத களத்திற்கே இவன் தளபதி! அண்ணன்
கட்டளைக்காய் காத்திருக்கும் புலிப்படையணி
விழியசைவு ஒன்று போதும் எதிரியோடுவான்! வானில்கூட
சிங்களத்தைப் பந்தாடுவான்! கடலும் கூட கைகட்டி
காத்து நிற்குமே! அண்ணன் கட்டளைக்குப் பணிந்து
அலையும் சுழன்றடிக்குமே! எதிரியைத் திணறடிக்குமே!
ஈழத்தின் காவலனாய் நிற்கும் செல்வனே! “கரிகாலன்”
என்னும் பெயர் கொண்ட எங்கள் அண்ணனே! ”
வாழ வேண்டும் தமிழைப் போல பல காலமே! வாழ்த்தி
நின்றோம் எங்கள் அண்ணா நீ வாழ்கவே!..நீ ஆளவே!
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
One Comment on “ஈழத் தலைமகனே!”
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!




அன்பார்ந்த தமிழ் ஈழ மக்கள் அனைவருக்கும் வணக்கம் .
நான் உங்கள் முன் சிறு செய்தி ஒன்றை முன் வைக்க விரும்புகிறன் நம் இனத்தின் காவலன் தமிழ் இனத்தின் தலைவன் எங்கள் கரிகாலன் ! மதிப்புக்குரிய அண்ணன் தற்சமயம் இல்லை என்பது யாவரும் அறிந்த ஊண்மை ஆகவே சில வெளிநாடு சக்திகளுடன் இணைந்த எமது தேச விரோதிகள் இப்போது தம்மை தலைமை என்று கூறிக்கொண்டு வாலட தொடங்கி விட்டார்கள் அவர்களுக்கு ஊது குழலாக இரண்டு வெப்சைட் இதில் என்னவன்றால் வெப்சைட் யாரும் ஊருவகிடலம் ஆகவே அன்பான தமிழ் மக்கள் அனைவரும் இந்த போலியான அறிக்கைகள் போலியான முகம் கொண்ட கே பி போன்ற சில ஈன பிறவிகள் சொல்லும் நாடக கதையினை நம்ப வேண்டாம்
நன்றி
புலிகளின் தாகம் பிரபாகரனின் தாகம் அதுவே நம் தமிழீழம்