கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! – கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை

thamarai poetஏ இந்தியாவே…!எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு…
எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று…

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்…
பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!

தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு, நான் வேறு!

ஏ இந்தியாவே!

ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!

தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே…
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!

உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!

எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!

வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!

எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே…

உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!

உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்……

பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே…
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே…

உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே…

உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே…
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்…

ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!

நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!

நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!

நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!

……….

பின்குறிப்பு:

உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!

குழந்தைகள் எங்கிருந்தாலும்குழந்தைகளே…

அவர்கள் நீடுழி வாழட்டும்!

எம் குழந்தைகள் அழுதாலும்

உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

15 Comments on “கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்! – கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை”

  • Vasan wrote on 15 June, 2009, 22:17

    மிகவும் நன்று சகோதரியே, நன் ஒரு ஈழத்தமிழன், தற்சமயம் எங்கள் மனனிலை எப்படி இருக்கோ அதை நீங்கள் கவி வடிவில் கூறி விட்டீர்கள் நன்றி உங்கள் உணர்வுக்கு, இதை பார்த்தாவது சில சுயநலவாதிகளுக்கு கொஞ்ஞமாவது உணர்வு வரட்டும். நன்றி

  • kumar wrote on 16 June, 2009, 10:20

    தாமரை எங்கள் மனக்குமுறலை உங்கள் வார்த்தையால்… – திரிகை செந்தில் குமார்

  • vasavan wrote on 17 June, 2009, 21:07

    you are absolutely right.we are waiting to give for a sutable reply.Sonia didn’t learn a good lesson from the past.We tamils should teach her a good lesson.citizen of Tamileelam

  • பாசுகரன் wrote on 17 June, 2009, 22:06

    சாபம் பலிக்கட்டும்.அதற்காக முருகனை வேண்டுகிறேன்.

  • thiru wrote on 18 June, 2009, 3:13

    well, sisterthamarai….

  • vinoth wrote on 18 June, 2009, 17:28

    Hai Thamarai,

    our pain is reflaction of ur words ..every tamil politiciopns must answer our pain

  • roob wrote on 18 June, 2009, 21:24

    தாமரை அக்கா அவர்களே ,மிக்க நன்றி.உங்கள் கவிதை ,உங்கள் போராட்டம் அனைத்தும் பாத்தேன் .எது போன்று ஏன் ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் இல்லை என்று வருதுகிறேன் .நானும் தமிழச்சிதான் .வெட்கபடுகிறேன். தலைவன் மாண்டுவிட்டார் என்று சொல்கிறார்கள் .நம்பமுடியவில்லை .இதயம் சுக்குநூறாகிபோய்விடுகிறது .நம் தமிழ் நாட்டில் கிளர்ச்சி ஏற்படவேண்டும்.ஆனால் இல்லை. மக்களுக்கு பணம் பெருசபொச்சி .ஈழத்தில் நம் சகோதர சகோதரிகள் கஷ்டப்படும் நிலைகண்டு குமுறுகிறேன் .தங்கள் ,சீமான் சார் ,மற்றும் திரைப்படம் துறை சார்ந்தவர்கள் ,ஒட்டுமொத்த தமிழ்நாடும் உண்ணாவிரதம் இருந்தாவது அவர்களுக்கு தனி ஈழம் பெற்றுத்தரவேண்டும் .என்ன செய்யலாம் எனி .மனம் துடிகின்றது

  • r.chandar sekar wrote on 18 June, 2009, 23:42

    உங்கள் வார்த்தையால் எங்கள் மனக்குமுறலை ………..

  • tamilcanadian wrote on 19 June, 2009, 7:11

    ஆயுதம் ஏந்தினோம் போராட -நீயோ
    கவிதையை ஆயுதமாக்கிவிட்டாய்
    பிறந்துவிடு மறுபிறப்பில் ஈழத்தமிழ் வேங்கையாக

  • ஜனார்த்தனன் சிதம்பரம் wrote on 19 June, 2009, 18:33

    தமிழ்ச் சேற்றினில் மலர்ந்த செந்தாமரை
    தன்னைத் தாங்கி நிற்கும் தண்டாம்
    தொப்புற் கொடி உறவை – தன்
    உயிரென நினைத்து கவிதை சமைத்து
    மலர வைக்கும் “சூரியனுக்கு” எதிராக,
    தலையிற் சூடும் “கை” க்கு எதிராக
    பொங்கியெழுந்து வெடித்து சிதறியது
    உலக இலக்கியத்தில் இதுவரை
    இடம்பெறாதொரு புதுமை !

    உன் சாபம் பலிக்கட்டும் !
    உடன் பிறந்த துரோகம் தொலையட்டும் !
    வாழிய உன் இன உணர்வு !
    நீ வாழ்க ! உன் தமிழ் வாழ்க !
    இவ்வையம் உள்ளவரை !

    ஜனார்த்தனன் சிதம்பரம்

  • vinoan wrote on 25 June, 2009, 2:23

    ஈழத்து மக்களின் வலி அறிந்து .
    கவி பாடிய கண்ணகியின் மகளே நீ வாழ்க.
    எம் மக்களுக்ககாய் உன் பனி தொடர்க ………………
    vinoan

  • d.kumaram wrote on 29 June, 2009, 15:28

    india tamilan enbathil vetkapadukeran

  • thamizhselvan wrote on 4 July, 2009, 19:32

    anbu thozhi nan thamizhagathin pulanaaiyvu idhazhin seidhiyalar neengal kuri anaithum engal unarvugalai pradhipalaipadhaga irunthadhadhu.engal mounathin mugavari thaan ungal vaarthaikkal,engal kanneerin vali thaan ungal kavithai.kaalam marum nam inam thamizh eezhathai meetkum andru throgikal(suyanala indhiya) makkalmandrathil thuukkil idapaduvargal

  • VASANTHI wrote on 8 July, 2009, 21:51

    தாமரையின் சாபம் பலிக்கின்றது
    பருவ மழை பொய்கின்றது
    பயிர்கள் கருக நதிநீர் குறைகிறதாம்

    தாயே உன் சாபம் பலிக்கிறது

  • Sutharshan wrote on 13 July, 2009, 7:29

    உங்களின் ஆதங்கம் புரிகிறது அக்கா.. எங்களுக்காக நீங்கள் எழுதிறது சந்தோசம்..
    எண்டாலும் இப்பிடி சாபம் போடாதயுங்கோ.. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால், “எங்களுக்கு மேலான” என்று நான் நம்பும் அந்த சக்தி எல்லாவற்றுக்குமான பதிலை கொடுத்தே தீரும்.
    கடைசியாய் நீங்கள் சொன்னது எனக்கு பிடிச்சிருக்கு..”எம் குழந்தைகள் அழுதாலும்
    உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!”.. அப்பிடி அந்த குழந்தைகள் சிரிக்க வேணும் எண்டால் அவரது அப்பா அம்மாவும் சிரிக்கவேனுமே.. அதுக்காக வாவது அவர்கள் வாழ்ந்து விட்டு போகட்டுமே….

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Copyright © 2010 நெருடல். All rights reserved.