விடுதலைப்புலிகளின் நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றியதாம் இலங்கைராணுவம்!

question-mark2aஇலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் நடந்த போர் முடிவுக்கு வந்து, ஏறத்தாழ ஒரு மாதம் ஆகிறது. இந்த நிலையில் நேற்று முல்லைத்தீவு பகுதியில் உள்ள வெள்ள முல்லை வாய்க்கால் என்ற இடத்தில், ராணுவத்தினர் தேடுதல் மற்றும் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, விடுதலைப்புலிகள் பயன்படுத்திய நீர்மூழ்கி கப்பல் ஒன்றை ராணுவத்தினர் கைப்பற்றிக்யுள்ளார்கள்.

இந்த நீர்மூழ்கி கப்பல் 24 அடி நீளம் கொண்டதாகும். இதன் உயரம் 4 அடி. இதை பத்திரிகையாளர்களிடம் காண்பித்துள்ளனர் ராணுவ அதிகாரிகள்.

மேலும் நூற்றுக்கணக்கான நவீன போர் ஆயுதங்களும், டி.56 போன்ற நவீன ரக துப்பாக்கிகளும், இலகு ரக இயந்திர துப்பாக்கிகளும், கையெறி குண்டுகளும் கைப்பற்றப்பட்டன. அவற்றையும் நிருபர்களின் பார்வைக்கு, ராணுவத்தினர் வைத்திருந்திருந்தனராம்.

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Copyright © 2010 நெருடல். All rights reserved.