அன்பு தமிழ் நெஞ்சங்களே

தமிழர்களின் உறுதியை சிதைக்க எதிரி பலகோணங்களில் எமக்கெதிரான எதிர்ச்சக்திகளை காலகாலமாக எருவூட்டி வளர்த்து வந்தான். இன்று பெருமுயற்சியுடன் அதை உலகெங்கும் பரவவிடும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளான்.

இச்சக்திகள் புதிய முகழூடிகளுடன் உங்கள் முன் வருகின்றன. நீலச்சாய தொட்டியில் ஊறிய நரிகளும் பச்சை புழுகரும் ஒன்று கூடி ஒரு பக்கமாகவும்;. தமிழர் நலன் மீது அக்கறை கொண்டவராக தம்மை அடயாளம் இட்டு நடைமுறைச் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப அரசியல் நடத்த வாருங்கள் என்று அழைப்பவர் இன்னொரு புறமாகவும் பெருகி வருகின்றனர்.

தாம் வந்த பாதை எங்கும் மலம் கழித்து வைத்த இவர்கள் இனிப் போகப் போகும் பாதையில் உங்ளையும் அழைக்கின்றனர்.. இந்த ஈனப்பிறவிகளின் கடந்த கால வரலாற்றை மறந்துவிட எமக்கு என்ன உரிமை உள்ளது. இவர்களுக்கு நாம் துணை போனால் இன்றுவரை கொல்லப்பட்ட 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட எமது உறவுகள்  எம்மை மன்னிப்பார்களா. எமது உறவுகளின் தியாகம் என்னவாயிற்று. அவர்களின் வலி வேதனை விட்டுச்சென்ற ஏக்கங்கள் இன்னும் எம்மை விட்டு விலகாத இந்த காலத்தில் நாம் அவர்களில் எஞ்சியிருப்பவருக்கு பாதுபாப்பு தேட இரவுபகலாய் வீதிகளில் நிற்கும் இந்த துயர்மிகு காலத்தில் வடுக்களுடன் நாமிருக்க சிந்திய இரத்தம் இன்னும் காயாதபோது பாவிகள் கதிரைக்கான சண்டையை தொடங்கி விட்டனர்  எப்படித்தான் இப்படியும் வாழலாம் என்று நினைக்கின்றனரோ இந்த ஈனப்பிறவிகள்.   இவர்களுக்கு தேவையான நிதி வளங்களையும் அரசியல் ஆலொசனைகளையும் சர்வதேச ஒத்துழைப்பையும் இந்திய சிங்கள பேரின வாதிகளின் வெளிநாட்டு கிளை நிறுவணங்கள் வழங்கி வருகின்றன.

இதுபோன்ற சதிகள்  எமக்கு புதியதல்ல என்பதையும் நீங்கள் அறிங்துள்ளீர்கள். 1987ன் காலப்பகுதியில் இது போன்ற ஒரு சதியை நீங்கள சந்தித்து; தலைவன் வழியில் அதை முறியடித்து வெற்றி கொண்டு 1991ல் மீண்டும் உங்கள் பலத்தை வளப்படுத்தி தமிழீழ தேசிய கட்டுமானத்தை உருவாக்கி 17 வருடமாக தமிழீழ சுதந்திர தேசத்தினை உலகுக்கு காட்டிய பெருமை உங்களிடம் உள்ளது.. அதற்கான விலையும் தியாகமும் உங்கள் உறவுகளின் உறுதியில் வளர்ந்தது அது இன்று மிகப் பொரியதொரு விடுதலைப் பரிமாணமாமாக வளர்ந்து உங்கள் வாசல்வரை விரிந்துள்ளது.  ஆதை பாதுகாக்கும் பொறுப்பும் செப்பனிடும் பணியும் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தேசிய தலைவரின் தமிழீழ கட்டுமாணம் இன்றய நவீன உலகில் ஊணமுற்று கிடக்கின்ற பொருளாதார சழூக சமத்துவமற்ற கொள்கை வக்கிரங்களை பின்தள்ளி ஒரு சுபீட்சத்தை காட்டியது.  இத்தன்மை சில வல்லரசுகளின் பின்கொல்லைப்புற எச்சங்களை சாடுவதாகவும் ஊழல் மிக்க சனநாயகத்தை புறந்தள்ளுவதோடு நிற்காது ஆரசியல் சூதாட்டவாதிகளின் பின்னடைவுகளுக்கும் வீழ்ச்சிக்கும் வழிவகுத்து விடுகின்றது. தேசிய தலைவரின் கொள்ளைகள் தமது புகழ்ச்சியின் சரிவுக்கு காரணமகிவிடும் என்ற கருத்தும் கிழக்கு தேச சண்டியர்ளை குழப்பத்துக்குள்ளாக்கியது. இத்தகைய ஒரு தலைவனுடைய வருகை தமது இருப்புக்கு சவாலாகும் என்ற எண்ணம் போலி சனநாயகவாதிகளுக்குள் மேலோங்யியது. போலியான குற்றச்சாட்டுகளையும் ஆதாரமற்ற கைதுகளையும் கையிலெடுக்கும்; போக்கும் தெற்காசிய பாமரமக்களின் அறியாமையையும அவர்தம்; ஏழ்மையையும் தமக்கு சாதகமாக பயன்படுத்தி தெற்காசிய அரசியலை வழிநடத்தும் கூட்டங்கள் இருக்கும் வரை ஒரு சிறப்பான சனநாயத்தின் அடையாளமாக இந்தியா போன்ற நாடுகளை ஏற்கமுடியாது. ஆனாலும் இந்நாடுகள் தம்மை தார்மீகவாதிகள் என்று நிலை நிறுத்த பெரும் முயற்சிகளை செய்து வருகின்றன.  அடக்குமறை எங்கெல்லாம் இருக்குமோ அங்கெல்லாம் நாம் போராட அணிதிரள வேண்டும் என்பது எம் தலைவரின் எண்ணம். அஃவே சிறப்பு மிக்க ஒருதலைவனைப் பெற்ற தமிழினம் உலக சழூக நீதிக்காக பாடுபடும் பொரும் பொறுப்பையும் இன்று தலைமேல் ஏற்று நிற்கின்றது.

தேசியதலைவரின் வழிநடத்தலில் விடுதலையின் தன்மையை உலத்தமழிhகள் சிறப்பாக அறிந்து அவர் வழியில் திரண்டனர்.  இவை உலகத் தலைவர்களை தேசியதலைவரின்; இருப்பிடத்தை நோக்கி செல்லத்தூண்டியது. தமிழீழத்தின் கட்டுமாணம் எழிமையான பண்பாட்டு விழுமியங்iளை சிறப்பாக காட்டியது. பசுக்களைத்தேடி கன்றுகள் ஓடுவதை  வாழ்வியலின் கலப்படமற்ற இயற்கை அழகாக பாசத்தின் எடுகோளாக பார்க்கும் ஒவ்வொருவருக்கும் தமிழீழம் மகிழ்வைக் கொடுத்தது. அந்த வயல்காற்று வாசம் பல்லாயிரம் மயில்களுக்கு அப்பால் வாழும் எம்மை மகிழச் செய்தது. எம் பாரம்பரிய தேசத்தின் தனித்தன்மை தமிழரின் செழுமைமிகு வாழ்வுக்கு எவ்வாறு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற செய்தி புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழனுக்கும் தேசிய தலைவரினால் சொல்லப்பட்டுள்ளது.

ஒருவனுக்கு ஒருவன் அச்சுறுத்தலாக இருந்த இந்தியனும் பாகிஸ்தானியனும் சீனனும் ஒற்றுமையாக ஓரணியில் நின்று தமிழர்களின் விடுதலையை எதிர்த்தற்கான அடிப்படைக் காரணம் பிரபாகரனின் உண்மையான சனநாயக கொள்கைகள் சனநாயக சீரழிவை செய்யும் இந்நாடுகளுக்கு எதிரான தன்மையை கொண்டதாக இருந்iமையே. இப் போலியான சனநாயக நாடுகளுக்கு பிரபாகரனின் நடைமுறை கொள்கைகளும் இனங்குளுக்கான விடுதலைச் சிந்தனையும் சாதிய சாக்கடையின் சுத்திகரிப்பும் என்றுமே  இடைஞ்சலாகவே இரு;ந்துள்ளது. மகாத்மா காந்தியின் சுதந்திரம் பற்றிய சிந்தனையை உலகில் நடைமுறைப்படுத்திய எமது தேசியத் தலைவர் மீது தெற்காசிய அரசியல் போலித்தனம் சீற்றம் கொண்டதுடன் அவர்  மீது காழ்ப்புணர்வும் தோன்றியது..  இந்திய போலிச் சுதந்திரவாதிகளான காங்கிரசுக்கும் அதன் ஒருசில சுயநலத் தமிழ் பிரதிநிகளுக்கும்; தேசியத் தலைவரின் வருகை எரிச்சலை ஊட்டியது. இதற்கு மேலாக ஒருபடி மேலே சென்ற தேசியதலைவர் ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்ற வரைவிலக்கணத்தை வாழ்க்கை முறையில் வாழ்ந்து காட்டியதும் அவர்iளை அவமானப் படுத்தியது. எமது தேசிய தலைமையை இல்லாது செய்யவேண்டும் எனபல நரிகள் சூழுக்களாக இணைந்து சதி திட்டம் வகுத்தன. இந்த நரிகள்தான்; இன்று உங்கள் முன் சமாதானம் பேச வேறு முகங்களுடன் வருகின்றன. தனித்து வெல்ல முடியாத பொரும் தலைவரின் வீரமிகு படைiளை சர்வதேச சூழ்ச்சி ஒன்றின் ழூலம் வெல்ல பயங்கரவாதம் என்னும் பரப்புரையை சிங்கள பேரினவாதம் கையிலெடுக்க அதற்கு உறுதுணையாக நின்றன பல நாடுகள்.

ஊழல் மிக்க அரசியலை ஓட்டைச் சட்ட விதிமுறைகளை ஐனநாயகம் என்ற போர்வைக்குள் விளக்கமில்லாத மக்களை பயன்படுத்தி; அதிகார வெறிபிடித்து அலையும் ஒரு சூதாட்ட கூட்டம் பதவிகளைக் கைப்பற்ற தேர்தல் என்ற சனநாயகத் தெரிவுமுறையை தம் நலனுக்காக முறையற்று பயன்படுத்துவதை எப்படி அனுமதிப்பது. வலிமையுள்ளவன் வாழ்கின்றான் என்ற சித்தாந்தத்தினூடாக நீதி நேர்மை என்பவற்றை தோற்கடித்து போலி வேடதாரிகளின் உதவியுடன் அரசியல் அரங்கேற்றம் நடைபெறுகின்றது.  இத்தன்மை தேசியத்தலைவரின்  சித்தாந்த கோட்பாட்டுக்குள் மரணதண்டனைக்குரிய குற்றங்களாக கணிக்கப்பட்டுள்ளமை இந்த போலி சநனாயகவாதிகளை கலங்கச்செய்தது. இக்கொள்கையின் அடிப்படைச் சிறப்பை கொச்சைப்படுத்திய இப்போலி சுயநல அரசியல்வாதிகள் ஆரசியலை வியாபாரமக்கி குடும்ப முதலீட்டின் களமாக ஆசண எண்ணிக்கை விரிவுபடுத்தும் சுயநல அரசியலை சந்ததி வளர்ப்பை மன்னர் ஆட்சியின் மறுவடிவம் இல்லை என்று மறுக்க முடியுமா.

தமிழனாக நாம் வாழ்ந்து பெற்ற அறிவு மிகவும் பெரியது. ஏங்கள் தலைவனின் சிந்தனையில் நாம் ஒவ்வொருவரும் பட்டை தீட்டப்பட்ட ஒளி மின்னலாக தமிழ் காப்பாளர்களாக வாழ்கின்றோம். புவிமீது எம்மினத்தின் பெருமை தலைவர் வழிநடத்திய வழியில் தொடர்ந்து பரிணாமம் பெறுவதை பல சக்திகளால் ஏற்றுக்கnhள்ள முடியவில்லை. பாசறை நோக்கி பயணித்த பாதங்கள் தமது இறுதி நாள்வரை நெஞ்சில் சுமந்த லட்சிய சிந்தனை இன்னும் உரமாக வீச்சாக பரிணாமம் பெறத்தொடங்கும் நேரம் இது. நாங்கள் ஒவ்வொருவரும் இலட்சியம் தவராமல் போராடும் காலமிது.

தேசிய தலைவர் எத்தகய சக்திகளுடன் போராட வேண்டியுள்ளது என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளீ;கள். இக்காலததில் நீங்கள் ஒவ்வொருவரும் அரசியல் போராளிகளாக மாறவேண்டும். எம் தலைவருடய சித்தாந்த வழிமுறையை நெஞ்சில் சுமந்து தேசிய கொடியுடன் விரைந்து வாருங்கள்.

1)       எப்பொருள் யார் வாய் கேட்கினும் அப்பnhருள் எம்தலைவன் நோக்குடையதா எனக் காண்க.

2)       தேசிய தலைவருடய நோக்கை கைவிட்ட எவரும் தமிழினத்தை வழிநடத்தும் தகுதியற்றவன் எனச் சொல்க.

3)       ஏமது தேசிய கொடி புலிக்க்கொடி என்று உயர்த்துக.

துணிந்து நிற்போம் தோடர்ந்து செல்வோம் தேசியத் தலைவன் வழிநிற்போம்..
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

மணிவண்ணன் ஏகாம்பரம்

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Copyright © 2010 நெருடல். All rights reserved.