சுவிசில் பாதயாத்திரை நிறைவு
-
இவ் விடயம் 19. 06. 2009, (ஞாயிறு),
தமிழீழ நேரம் 1:23க்கு பதிவு செய்யப்பட்டது
- செய்திகள், புகைப்படங்கள், புலத்தமிழர்
தாயக மக்களின் அவலத்தை வெளிப்படுத்தி அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யும் நோக்குடன் சுவிஸ் தமிழர் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட 250 கி.மீ. நீள பாதயாத்திரை புதன் மாலை பேர்ண் நாடாளுமன்ற முன்றலில் நிறைவு பெற்றது. இதன்போது, மாலை 5:00 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமான ஒன்றுகூடலில் பசுமைக் கட்சியின் வோ மாநில நாடாளுமன்ற உறுப்பினர் வன்சிங்கர் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டார். திருமதி சிவாஜினி தேவராஜா தலைமையில் நடபெற்ற நிகழ்வில், இனவெறிக்கு எதிரான எஸ்.ஓ.எஸ். அமைப்பின் பணிப்பாளர் கார்ல் குறுண்பேர்க், சுவிஸ் தமிழர் பேரவையின் ஆலோசகர் திருமதி அன்னா அனோர், செயலாளர் தம்பிப்பிள்ளை நமசிவாயம், உபதலைவர் சண் தவராஜா ஆகியோரும் உரையாற்றனர்.
யூன் முதலாம் திகதி ஜெனீவா மாநகர முதல்வர் ரெமி பகானி அவர்களால் ஜெனீவா-கரூஸ் நகரில் வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்ட பாதயாத்திரை தொடர்ந்து நியோன், லவுசான், இவர்டோன், நொ~த்தல், பீல் ஆகிய நகர்களுக்கூடாக 13 தினங்கள் பயணித்து பேர்ண் நகரை வந்தடைந்தது.
தாயகச் சூழல் காரணமாக துவண்டு கிடக்கும் ஈழத் மக்களுக்குத் தெம்பூட்டியுள்ள அதேவேளையில், சுவிஸ் மக்களுக்கும் விழிப்பூட்டுவதாக இந்தச் செயற்பாடு அமைந்திருந்தமை குறிப்பிடத் தக்கது.
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!














