முகாம்களில் உள்ள மக்களின் துன்பத்தில் குளிர் காயும் ஒட்டுண்ணிகள்

Aftermath_IDP3இடம்பெயர்ந்த 3 இலட்சம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள, இடைத்தங்கல் முகாம்கள், அமைக்கப்பட்டுள்ள நிவாரணக்கிராமங்களில், விற்கப்பட்டும் பலசரக்கு பொருட்கள் அதிகூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஒரு சில நிவாரணக்கிராமங்களில் மாத்திரம், பலநோக்கு கூட்டுறவு சங்க விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ள போதும், பெரும்பாலான கிராமங்களில் இவை இன்னமும் இயக்கத்துக்கு வராத நிலையில் உள்ளன.

இதனால் தனியாரும் பொருட்கள், மீன்கள் போன்றவற்றை விற்பனை செய்வதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக 2 இலட்சத்து 60,000 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள மனிக் பாம் நிவாரணக்கிராமங்களுக்கு, மீன்களை விற்பனை செய்வதற்கு வியாபாரிகள் மன்னாரில் இருந்து மீன்களை வாங்கி வந்து, இங்கு அதிக விலைகளில் விற்பனை செய்வதாக தெரிவிக்கபப்டுகிறது. சாதரணமாக அரைக்கிலோ மீன் 250 ரூபாய்க்கு மேலாக விற்பனை செய்யப்படுகிறது.

அதுமட்டுமில்லாது,

முகாம்களில் இளநீர் ஒன்று ரூ 40 தொடக்கம், 50 வரை விற்கப்படுகிறது. முட்டை ஒன்று 16 ரூபா தொடக்கம் 20 வரை விற்கப்படுகிறது. காய்கறிகளும் அதிகவிலைக்கு விற்கப்படுகின்றன. ஒரு கிலோ மீன் வகைகள் 400 ரூபாய் தொடக்கம் 800,900 வரை விற்கப்படுகிறது.

பொருட்களின் இவ்விலையேற்றத்தினால் முகாம் மக்கள் மிகுந்த அசௌகரியத்துக்குள்ளாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவெளை இவ் அகதி முகாம்களில் உள்ள மக்களுடன் தொடர்புடைய, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த குடும்பங்கள் பற்றிய விபரங்களையும் காவற்துறையினர் திரட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த பகுதியில் உள்ள தமது சொந்த இடங்களுக்கு இவர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விபரங்களை திரட்டும் பொலிஸார் தம்மிடம் தெரிவித்ததாக, முமாக் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Copyright © 2010 நெருடல். All rights reserved.