கடந்த 30 நாட்களில் 25 வயோதிபர்கள் தடுப்புமுகாமில் மரணம்

idpவவுனியா கோயில் குளம் வயோதிபர் நிலையத்தில் கடந்த 30 நாட்களில் 25 வயோதிபர்கள் மரணமாகியுள்ளனர். மேலும் 2வர் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 175 வயோதிபர்கள் செட்டிக்குளம் தடுப்பு முகாமில் இருந்து அவர்களின் உறவினருடன் பிரிக்கப்பட்ட நிலையில் இங்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

தடுப்பு முகாமை விட முதியோர் இல்லத்தில் வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அரசு கூறிய காரணத்தால், அங்கு இடமாற்றப்பட்ட இவ் வயோதிபர்கள், சரியான பராமரிப்பின்றி, பரிதாபமாக உயிரிழப்பதாகவும், அடக்கம் செய்வதற்குக் கூட உறவினர்கள் வராத நிலை காணாப்படுவதாகவும் வவுனியா வாசி ஒருவர் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்தார்.

செட்டிக் குளம் வயோதிபர் இல்லத்தில் 76 ஆண் வயோதிபர்களும் 54 பெண்களும் உள்ளதாக கூறப்படுகிறது.

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Copyright © 2010 நெருடல். All rights reserved.