பயங்கரவாதத்தை எப்படி ஒழிக்க வேண்டும் என்று இனிமேல் உலகம் தங்களிடம் பயிற்சி பெற வேண்டுமாம்
-
இவ் விடயம் 21. 06. 2009, (ஞாயிறு),
தமிழீழ நேரம் 0:50க்கு பதிவு செய்யப்பட்டது
- செய்திகள்
பயங்கரவாதத்தை எவ்வாறு ஒழித்து கட்டுவதென்பதனை உலகம் தம்மிடமிருந்து கற்றுக்கொள்ளும் என இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வெள்ளமுள்ளிவய்க்கால் பகுதியில் கடமையில் ஈடுபட்டுள்ள படைவீரர்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகச் சிறந்த மனோ திடம் கொண்ட படையாக தமது இராணுவப் படை திகழ்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்:
ஒழுக்க விதிகள் மற்றும் திறமைகள் என்பவனவற்றில் உலக நாடுகளுக்கு தமது படைவீரர்கள் முன்னுதாரணமாக விளங்குவதாக அவர் தெரிவித்தள்ளார்.
1950ம் ஆண்டில் மலேசிய இராணுவம் பயங்கரவாத்திற்கு எதிரான போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்ததன் பின்னர், பயங்கரவாதத்தை வெற்றிகரமாக இல்லதொழித்த முதலாவது இராணுவமாக இலங்கை இராணுவம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலேசிய இராணுவம் 303 ஆயுதங்களைப் பயன்படுத்தியே இந்த யுத்தத்தை முன்னெடுத்தாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், உலகின் மிகக் கொடிய பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை இல்லாதொழிக்க மிக நவீன ஆயுதங்களை இராணுவத்தினர் பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை யுத்த வெற்றியை நினைவூட்டும் வகையில் யுத்த அருங்காட்சியகம் ஒன்றை அமைக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்கள் உள்ளிட்ட பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். முள்ளியவாய்க்கல் பகுதிக்கு நேற்று விஜயம் செய்த அவர், ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
3 Comments on “பயங்கரவாதத்தை எப்படி ஒழிக்க வேண்டும் என்று இனிமேல் உலகம் தங்களிடம் பயிற்சி பெற வேண்டுமாம்”
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!





சீனாவும் பாகிஸ்தானும் கொடுத்த கொடூரமான இரசாயண ஆயுதங்களைப் பாவித்து பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களை அழித்து விட்டு “பயங்கரவாத்தை எப்படி ஒழிப்பது என்று உலக நாடுகள் தம்மிடம் கற்றுக்கொள்ளும்” என்று சரத் பொன்சேகா தம்பட்டம் அடிப்பது சிரிப்பாக இருக்கிறது!
உலக நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் வேறொன்று இருக்கிறது. அதாவது “பயங்கரவாத ஒழிப்பு என்ற முகமூடியைப் போட்டுக்கொண்டு ஒரு இனத்தை மிகக் கெட்டித்தனமாக மிக இரகசியமாக வேரோடு அழிப்பது எப்படி” என்ற வித்தையை சரத் பொன்சேகாவின் ஊடாக இலங்கை அரசிடம் உலக நாடுகள் கற்றுக்கொள்ளலாம்.
ethu mudijavilla arampam porutthirunthu pappam
Hi pons ,
wait couple more months em thalivan will be there shortly.