பிரான்சில் நடைபெற்ற உலக அகதிகள் தினத்தில் பெருமளவு மக்கள்

IMG_0308பிரான்சில் 20.06.2009 நடைபெற்ற உலக அகதிகள் தினனத்தில் பெருமளவு பிரான்சு வாழ் தமிழ் மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஈழத்தமிழ் மக்கள் பல தசாப்த காலமாக சிங்கள இன அடக்கு முறையாலும், சிங்கள பௌத்த சித்தாந்தத்தில் ஊறிப்போன சிங்கள ஆட்சியாளர்களின் சுய நலத்தில் சிக்குண்டு இன்று பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து தனது சொந்த நாட்டிலும், புலம்பெயர் நாடுகளிலும் ஏதிலிகளாக ஈழத்தமிழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். 

சுதந்திரத்தை பெற்றுக்கொள்ளவும், விடுதலையை பெற்றுக்கொள்ளவும் இன உணர்வோடு தொடர்ச்சியாக தமது வாழ்வுரிமையை கேட்டபடி உலகின் வாசல்களில் அகதிகள் என்ற பெயரையை சுமந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.இன்று உலகின் மிகப்பெரும் அகதி முகாம் என தற்போது வவுனியாவில் அமைந்துள்ள மனிக்பாம் அகதிகள் முகாம் கணிக்கப்படுகின்றது.

இந் நிலையில் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வரும் மக்கள் தமது அன்றாட வாழ்வை வாழ்வதற்கு காத்திரமான நடவடிக்கையை இந்த உலகம் எடுக்கவேண்டும் எனவும், பிரான்சு அரசு தமிழ் மக்களின் விடையத்தில் அக்கறை கொண்டு தொடர்ந்து சுதந்திரமான வாழ்வு ஏற்பட குரல் கொடுக்க வேண்டும் என ஒன்று கூடலில் கூடியிருந்த மக்கள் கேட்டுக்கொண்டனர்.

Tell a Friend
நெருடல் நிர்வாகத்தின் ஓர் அன்பான வேண்டுகோள்
 
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும். கீழுள்ள இந்த இணையத்தை பாவித்து ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதலாம்.
 

நன்றி

கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

One Comment on “பிரான்சில் நடைபெற்ற உலக அகதிகள் தினத்தில் பெருமளவு மக்கள்”

  • முத்தமிழ்வேந்தன், சென்னை wrote on 22 June, 2009, 8:46

    யுத்தம் முடிந்தபிறகும் தமிழர்களின் மீதான கொடுமைகள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன…இப்போதுதான் நாம் இன்னும் அதிகமான குரல் கொடுக்கவேண்டும்…உங்களின் போராட்டம் தொடர வாழ்த்துகிறேன்…

    http://www.muthutamil78.blogspot.com/

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Spam Protection by WP-SpamFree

Copyright © 2010 நெருடல். All rights reserved.