வடக்கில் எந்த நிலைமையையும் சமாளிக்கும் படையணிகள்: சிறீலங்கா

800px-Flag_of_Sri_Lanka.svgவிடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் வடக்கில் எந்தவொரு நிலைமையையும் சமாளிக்கும் விதத்தில் கணிசமானளவு படையினர் நிறுத்தப்படவுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. வடக்கே ஐந்து படையணித் தலைமையகங்களின் கீழ் இந்தப் படையணிகள் மீளவும் அங்கு நிறுத்தப்படவுள்ளதாகவும் படையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

வன்னியில் கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் இரு படையணித் தலைமையகங்கள் அமைக்கப்பட்டு அங்கு இரு படையணிகள் நிறுத்தப்படவுள்ளன. இராணுவத் தளபதி ஜேனரல் சரத் பொன்சேகாவின் திட்டத்திற்கமைய 51 வது மற்றும் 52 வது படையணிகளுடன் விசேட படையணி- 7 உம் யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவக் கட்டளைத் தலைமையகத்தின் கீழ் யாழ். குடாநாட்டில் நிறுத்தப்படவுள்ளன.

இதேநேரம், முல்லைத்தீவு சாலைப்பகுதியில் பிரிகேடியர் பிரசன்ன சில்வாவின் கட்டளைத் தலைமையில் 55 வது படையணி மேலதிகப் படையணியாக நிறுத்தப்படவுள்ளது. இதுவும் யாழ். மாவட்டத் தளபதி மேஜர் ஜெனரல் மென்டக சமரசிங்கவின் கீழ் கொண்டு வரப்படும்.

விசேட படையணி-7 ஆனையிறவில் நிறுத்தப்படவுள்ளது. குடாநாட்டில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள படையணியினரின் எண்ணிக்கையானது முன்னைய காலங்களில் குடாநாட்டிலிருந்த படையினருடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Copyright © 2010 நெருடல். All rights reserved.