ஐநாவிற்கு அனைத்தும் தெரிந்திருந்தும் இலங்கை இனவாதிகளுக்கு ஆதரவளிப்பது ஏன்?

innercityஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் எதிர்காலம் குறித்து எதிர்வு கூறிய சோதிடர் இலங்கை அரசாங்கத்தால் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. சபை இது குறித்தும் மௌனமாக இருக்கிறது.

இனந்தெரியாத வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு ஐநா பணியாளர்கள் தொடர்பிலும் ஐ.நா. என்ன செய்துள்ளது என இன்னர் சிற்றி பிரஸ் மூன்றாவது தடவையாகவும் கேள்வியெழுப்பியது.

இவ்விடயம் தான் தொடர்பில் அறிந்துள்ளதாகவும், எனினும் இதுவரை அவர்கள் பற்றி எதுவித தகவலும் இலங்கை அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவில்லை என்றும் இணைப் பேச்சாளர் பார்கன் ஹக் தெரிவித்துள்ளார். தன்னுடைய பணியாளர்களை ஐ.நா. பாதுகாக்கும் முறை இதுவா என இன்னர் சிற்றி பிரஸ் கேள்வியெழுப்பியது. இலங்கையில் மட்டுமல்ல எங்கும் இது தான் நிலைமை என அவர் தெரிவித்தார்.

போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலைக் குற்றம் என்பவற்றிலிருந்து இலங்கைக்குப் பாதுகாப்பளிக்கப்படும் அதேவேளை அங்குள்ள ஐ.நா ஊழியர்களுக்கு பாதுகாப்பளிக்கப்படுவதில்லை. இது ஏன் என இன்னொருமுறை இன்னர் சிற்றி பிரஸ் உடனடியாகவே ஒரு கேள்வியை முன்வைத்தது. ஆனால் அதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

ஜுன் 26ஆம் திகதிய பாதுகாப்புக் கவுன்சிலில் முழுநாளும் மக்களைப் பாதுகாப்பது பற்றியே பேசப்பட்டது. ஜோன் ஹோம்ஸ் அங்கிருந்து வெளியேறும் போது இன்னர் சிற்றி பிரஸ் அவரிடம் சில கேள்விகளைக் கேட்கக் காத்திருந்தது.

இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட எம்.வி.அலி என்ற மனிதாபிமான உதவிக் கப்பல் குறித்து நீங்களோ ஐநாவோ ஏதாவது செய்தீர்களா?

இல்லை என ஹோம்ஸ் தெரிவித்தார். ஆனால் இந்தியாவில் அப்பொருட்கள் தரையிறக்கப்பட்டு அது இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது. இதுவரை அது தான் நடந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

தடுத்துவைக்கப்பட்டுள்ள வைத்தயர்கள் தொடர்பில் ஏதாவது மேலதிக தகவல்கள் தெரியவந்ததா?

இல்லை என ஹோம்ஸ் தெரிவித்தார்.

17 அக்சன் பெய்ம் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டது உட்பட்ட பல படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டது பற்றி என்ன சொல்கிறீர்கள் எனக் கேட்ட போது ஐநா இதுவரை உத்தியோகபூர்வமாக இது வரை அதனைப்பற்றி எதுவும் அறியவில்லை. அது பற்றி ஏதாவது தகவல் கிடைத்தால் தான் சொல்லலாம் என்றார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐநா பணியாளர்களுக்கு என்ன நடந்தது?

ஐநா இது பற்றி கேட்டுள்ளது என்று ஹோம்ஸ் பதிலளித்தார். அவர்கள்  பாதுகாக்கப்பட வேண்டியதில்லையா சர்வதேச ரீதியில் பணியாற்றும் பணியாளர்களுக்குத் தானா பாதுகாப்பு என்று தெரிவித்த ஹோம்ஸ் இது குறித்து மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

3 Comments on “ஐநாவிற்கு அனைத்தும் தெரிந்திருந்தும் இலங்கை இனவாதிகளுக்கு ஆதரவளிப்பது ஏன்?”

  • tamilcanadian wrote on 28 June, 2009, 6:30

    இந்த இன்னர்சிற்றி பிறஸ் ரிப்போட்டர் மத்தியு லீக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்
    இவர் அன்று தொட்டு இலங்கை விவகாரத்தையும் ஐ.நா வின் அசட்டுத்தனத்தையும்
    அதன் தகிடுதத்ததையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.கேள்வி கேட்பதில் சலிப்பதில்லை
    இவர்.இவருக்கு நன்றியாவது சொல்வோமா? இன்னர்சிற்றிபிறஸ். ஒஆர்ஜி இலுள்ளது
    அவரின் ஈ.மெயில்

  • Nithaanan wrote on 28 June, 2009, 9:15

    ஏனென்றால் இந்தியாவின் மறைமுகமான அழுத்தமே. இந்தியாவை மீறி யாரும் எமக்கு உதவமுடியாது.இந்தியா எங்களுக்கு உதவப்போவதில்லை, உபத்திரவம்தான் செய்யும்.
    வண்ங்காமண்ணுக்கு என்ன நடக்கிறது?இந்தியாவால் முடியாதா?
    முடியும்- விருப்பமில்லை.
    இதுவரைநாளும் புலிகளைச் சாட்டினார்கள். ஆனால் இன்று சாட்டுவதற்கு புலிகள் இல்லை. சுய ரூபம் தெரிகிறது.
    தமிழா! யாரை நம்பினாலும் இந்தியாவை நம்பாதே.

  • gajan germany wrote on 28 June, 2009, 23:56

    இனி ஐநாவை நம்ப தேவைஇல்லை பாங்கி மூன் நாட்டுக்கு போகேக்க நல்ல இலம்குட்டிஜ குடுப்பாங்கள் அனுபவிச்சுட்டு வருவான் அவ்வளவும்தான் .

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Copyright © 2010 நெருடல். All rights reserved.