கருணாநிதியின் ஒற்றுமைப் புலம்பல் ஒரு பார்வை – புண்ணியன்

INDIA-ELECTION/என்ன விலை கொடுத்தேனும் ஈழத் தமிழரைக் காப்பேன் காப்பேன் என்றுதான் முதலில் துவங்கினார் கருணாநிதி. ஆனால் ஈழத் தமிழர் விவாகரத்தில் இது அவராக துவங்கி வைத்த போராட்டம் அல்ல.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈழத் தமிழர்களுக்காக முதன் முதலாக ஒரு உண்ணாவிரதத்தை அறிவித்து நடத்திய பிறகுதான் அரசியல் கட்சிகள் இந்த பிரச்சனைக்குள் காலடி எடுத்து வைத்தது. கருணாநிதியும் இதை தவிர்க்க முடியாதோ என நினைத்து இதை விருப்பமில்லாமல் கையில் எடுத்தார்.

ஆரம்பத்தில் இது போன்ற ஒற்றுமை புலம்பல்கள் அவரால் போதிக்கப்பட்டன. பத்து நாட்களுக்குள் மத்திய அரசு தலையிட்டு போரை நிறுத்த வேண்டும் இல்லை என்றால் நாற்பது எம்,பிக்களும் ராஜிநாமா என்று சர்வக் கட்சிக் கூட்டத்தில் எடுத்த முடிவை தள்ளிப் போட்டார். பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

கருணாநிதியைப் போலவே பதவியை விட்டு விலகத் தயாராக இல்லாத ராமதாசும் அமைதியாக இதை ஏற்றுக் கொண்டார். ஆனால் திமுக ராஜிநாமா கடிதங்களைக் கொடுத்தால் நாங்களும் கொடுப்போம் என்றார் ராமதாஸ். ஒரு நாடகமாக இதை எடுத்துச் செல்லலாம் என் நினைத்த கருணாநிதியோ உடனே ஒற்றுமை இல்லை என்றார். இந்த இருவருமே தங்களின் பதவிகளை இழக்க விரும்பவில்லை என்பதோடு இருவருமே மத்திய காங்கிரஸ் அரசை கண்டிக்க முன்வரவில்லை.   அந்த ராஜிநாமா நடகத்தை ஒட்டி சென்னைக்கு வந்த பிரணாப்முகர்ஜியை சந்தித்த பிறகு கருணாநிதி என்ன சொன்னார் தெரியுமா? நாற்பது நாள் போரை நான்கு நாட்களில் முடிவுக்கு கொண்டு வரமுடியாது என்று பிரணாப்முகர்ஜி சொன்னதை வழிமொழிந்தார்.

நீங்கள் ஏன் ராஜிநாமா செய்ய வில்லை என்று கேட்டதற்கு தமிழக கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்றார். அதாவது ஒற்றுமை இருந்தால் மட்டுமே இவர் எதையும் செய்வார் என்கிற நிலையில்  பேசுகிறார். உலகெங்கிலும் உள்ள பிராந்திய அரசுகள். அதிகாரத்தில் இல்லாத கட்சிகள் இவைகள் எல்லாம் ஒத்த கருத்தோடும் கொள்கை முடிவோடும்தான் எல்லா நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறதா? 1974‐ல் கருணாநிதியின் ஒப்புதலோடு மத்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த போது தமிழக கட்சிகளின் முழு ஒப்புதலோடுமா? கொடுக்கப்பட்டது. சேதுக்கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டதற்கும் இப்போது பாதியில் நிற்பதற்கும் தமிழக கட்சிகளின் ஒற்றுமை இன்மையா? காரணம்.

சிலர் இப்படியும் சொல்கிறார்கள். மூன்று மனைவிகளையும் ஆறு பிள்ளைகளையும் பெற்ற குடும்பத்துக்குள்ளேயே ஒத்த கருத்தோ ஒற்றுமையோ இல்லையே? இன்றுவரை கனிமொழியை  மாறன் சகோதர்கள் ஏற்றுக் கொள்ளவில்லையே? உயிரோடு இருக்கும் இரண்டு மனைகளுக்கிடையிலேயே ஒற்றுமை இல்லையே? எப்படி முரண்பட்ட அரசியல் கோரிகைகளோடு செயல் படும் கட்சிகளுக்கிடியில் ஒற்றுமை வரும்? என்பதுதான் அந்தக் கேள்வி…

ஒற்றுமை இருந்தால் சாதிப்பாரா?

போருக்குப் பின், வணங்காமண், கச்சத்தீவு பிரச்சனைகள் இப்போது தமிழகத்தில் தலை தூக்கியிருகிறது. பருவமழை தாமதமாகிக் கொண்டிருக்கும் சூழுலில் வரும் மாதங்களில் காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனைகள் பூதாகரமாக வெடிக்கும் சுழலும் இருக்கிறது. இந்நிலையில் இவர் சொல்கிறார்.  ஈழத் தமிழர் விவாகரத்தில் நம்மால் எதையுமே செய்ய முடியாமல் போனதற்கு நம்மிடம் ஒற்றுமை இன்மையே காரணம் இனியாவது ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

கச்சத்தீவு, முல்லை அணை, காவிரி எல்லா பிரச்சனைகளிலும் உங்களை ஆதரிக்கிறோம். மத்திய அரசிடம் பேசி எல்லா உரிமைகளையும் பெற்றுக் கொடுங்கள் என்று தமிழகத்தின் எல்லாக் கட்சிகளும் இந்த மூத்த தலைவரை அணுகிறது என்று வைத்துக் கொள்வோம் கருணாநிதி உட்னே மத்திய அரசிடம் பேசி தமிழக உரிமைகள் எல்லாவற்றையும் பெற்றுவிடுவாரா? என்ன? அவருக்குத் தெரியும் தமிழக முதல்வராக இருந்தாலும் தன்னால் இந்த இனத்திற்கோ தமிழகத்துக்கோ தமிழ் ஈழத்திற்கோ எதையும் செய்யவும் முடியாது செய்கிற துணிச்சலும் தனக்கு கிடையாது என்பது அவருக்கு தெரியும்.

இதோ சட்டசபையில் தினம் தோறும் ஈழப்படுகொலைகள் குறித்து எதிர்கட்சிகள் விவாதிக்க நேரம் கோறுகின்றன. ஒரு வார்த்தை கூட அந்தப் படுகொலைகள் குறீத்து பேச அனுமதிக்கக் கூடாது என்று பிடிவாதமாக மறுக்கிறார் கருணாநிதி. மத்திய அரசின் மீதும் மாநில அரசின் மீதும் அபாண்டமான பொய்களைச் சொல்வதாக குற்றம் சுமத்திக் கொண்டே இருக்கிறார். ஆனால் ஈழத் தமிழர்களுக்காகச் செய்ததாக தன்னால் எழுதபப்ட்ட கடித எண்ணிக்கைகளை மட்டுமே அவரால் இன்று வரை காட்ட முடிகிறது. இதைத் தாண்டி அவர் மத்திய அரசுக்கு எந்த அழுத்தத்தையும் கொடுத்ததும் இல்லை கொடுக்கப் போவதும் இல்லை. தினம் தோறும் முள்ளிவாய்க்காலில் ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட போது இவர்  மழை விட்டும் தூரல் விடவில்லை என்றால் அதாவது குறைவான மக்களே சாகிறார்கள் என்றார். எல்லாம் நடந்து முடிந்தது புலிகளின் கடற்படைத் தளபதி கருணாநிதியிடம் வைத்த கோரிக்கையைக் கூட உதாசீனப்படுத்திய இந்த மனிதர் , பிரபாகரனை போரஸ் மன்னனைப் போல நடத்த வேண்டும் என்று கூறிய இந்த மனிதர் பெரும் இன அழிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் எதுவுமே நடவாதது போல நம்மிடம் ஒற்றுமை இல்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.

இந்திய மத்திய அரசு தமிழக மக்களை இழிவாக நினைக்கிறது என்றால் அது கருணாநிதியின் கையாலாகாத தனத்தால்தான் அதுதான் உண்மை. பெரியாருக்கும் அண்ணாவுக்கும் பிறகும் தமிழக மக்களை அடிமாடுகளாக மாற்றிய இந்த மனிதரைப் போல ஒரு நடிகரை தமிழக் அரசியல் இதுவரை கண்டதில்லை. அதுதான் உண்மை. மற்றபடி ஜெயலலிதா போன்ற மக்கள் மீது அக்கறையற்றவர்கள் இருக்கும் வரை சரியான எதிர்க்கட்சி ஒன்று உருவாகாத வரை கருணாநிதி மட்டுமல்ல அவர் உருவாக்கி வைத்திருக்கும் அரசியல் வாரிசுகளே இந்திய மத்திய அரசின் ஏவலாட்களாக இருந்து காலாகாலத்திற்கும் ஆட்சி புரிவார்கள்.

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

8 Comments on “கருணாநிதியின் ஒற்றுமைப் புலம்பல் ஒரு பார்வை – புண்ணியன்”

  • மகிழ்நன் wrote on 29 June, 2009, 15:58

    உண்மை

  • sridhar wrote on 29 June, 2009, 16:18

    it really pains from the depth of my heart to know that the people of tamilnadu have no options but to select the better ghost. noway we can ever find the tamilians coming together to safeguard our interesrts.all party are equal in CHEATING the TAMIL EELAM PEOPLE.its a very big question mark for eelam people.are we going to LEARN anything from this or will be sleeping as usual.sri

  • Bhavani wrote on 29 June, 2009, 16:30

    தமிழ் நாடிலேய தமிழர் அடிமைதான். அரசியல்வாதிகள் தமிழரின் நலம் கருதியிருந்தால் தமிழகம் எபோதோ ஏழ்மைக்கு முடிவுகட்டி இருக்கும். காந்தி கனவு கண்ட நாட்டை பிரபகாரன் அமைத்தார். உலகத்திற்கே பொறுக்கவில்லை. கருணாநிதி தனது சொத்து சேர்க்கும் வழிகளையும் தமிழரை ஏமாற்றும் கலைகளையும் தனது குடும்பத்திற்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டார். இவரைபோன்ற ஆள்கள் அரசியலில் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவே கிடையாது.

  • ratchu wrote on 29 June, 2009, 17:12

    yes iithu romba romba unmaiyana news tamilnadla irukura araciyalvathi all 420 only. avungalukku thevai panam… ahchi…..mattum than makkalukku unmaiya work panna inga yarum illa tamilnadla
    oru KAMARAJAR pola oru nalla manushan namakku Thalaivara vantha pozhaipom.

  • selva wrote on 29 June, 2009, 17:40

    தமிழக தமிழர்களாகிய நாம் கையாலாகதவர்களாக போனோம் என்ற நிலை மிக வேதனைக்குரியது. தமிழ் மக்கள் மாக்களாக போனார்களே!

  • Karuppan wrote on 29 June, 2009, 19:20

    அன்பு புண்ணியன் அவர்கட்கு

    அற்புதமான கட்டுரை தங்களுடையது. பாராட்டுகள் தமிழர்களை ஒருங்கிணைப்பது என்பது தமிழ் துரோகிகளை அடையாளம் காட்டுவதேயாகும். கலைங்கேர் தான் தமிழின துரோகி என்பதை நான் எழுதிஉம பேசியும் வருகிறேன். அதுற்கு சான்றாக நான் அன்மய்த்ல் வெளிஎட்டேட்ட பிளவ்ஸ் என்கிற செய்திமடலை உங்கள்ளுக்கு அனுப்ப முயல்கிறேன் அனால் தங்கள் மின்னஞ்சல் என்வசம் இல்லே

    அன்புடன்
    கருப்பன்

  • Munaivar. MakizhNan wrote on 30 June, 2009, 6:03

    நாங்கள் அடிமைகளாக இருந்து ஆண்டையாக மாறிவிட்டோம் (தன்னலத்தை பேணுபவர்களும், பதவிக்கும், பணத்துக்கும் எஞ்சில் வடிய அலையும் நாய்கள் இதற்க்கு பொறுப்பு). தமிழர் என்ற உணர்வுவரும் பொழுது, சாதிய எண்ணங்களை தூண்டிவிடும் பார்பார்கள் கூட்டம் அதை எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் ஜெயா, கருணா, மருத்துவர் (இன்னும் பலர்) போன்ற பேடிகள் இருக்கும் வரை தமிழினத்தை யாராலும் காப்பாற்ற முடியாது….

    இப்படித்தான் என் போன்ற மெய்தமிழ்ர்கள் மடல் எழுதி கோபத்தை (சினத்தை) ஆற்ற முடியும்..

    இந்நிலையே மாற்ற

    ஆக்கம் அதர்வினாய் செல்லும் அசைவிலா
    ஊக்கம் உடையான் உழை…

    செயல் மட்டும் இப்பொழுது தேவை…. தமிழா எப்பொழுதும் ஆயத்தமாய் இரு…

  • hari wrote on 30 June, 2009, 16:19

    karunaneethi tamilina thalaivan alla tamil heeen thallaivan pesiye kedduthan elitheeye pilaiythan. soodu soranay illathan thalayil than mayyer illai mandail mulayum ilatha madathalaivan. piirappil engoh kolaru irukkuthungoh

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Copyright © 2010 நெருடல். All rights reserved.