புலம்பெயர்வாழ் தமிழ்மக்களே! விழிப்பாக இருங்கள்
- இவ் விடயம் 29. 06. 2009, (வெள்ளி),தமிழீழ நேரம் 21:04க்கு பதிவு செய்யப்பட்டது
- செய்திகள், புலத்தமிழர், முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்
தமிழீழமக்களின் விடுதலைப்போராட்டத்தை இராணுவரீதியில் தற்காலிகமாக வெற்றிகொண்ட பாசிசசிங்களஅரசானது, அரசியல்ரீதியாகவும் தமிழ்மக்களின் தாயகக்கோட்பாட்டை சிதைத்துவிட பலவேலைத்திட்டங்களை தங்கள் முகவர்களைக்கொண்டு புலம்பெயர்நாடுகளில் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது.
இம்முகவர்கள், சிங்கள, இந்திய அரசுடன் அல்லது அவர்களது உளவுத்துறையுடன் நேரடியாகத்தொடர்பு வைத்திருப்பவர்களாவார். இம்முகவர்கள் தங்கள் நாடுகளிலுள்ள சிங்கள அல்லது இந்திய தூதுவராலங்களிற்கு சென்றுவருபவர்களாகவும் சிலநாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அறிவுஜீவிகளாக, மொழித்திறன் உடையவர்களாக, உயர்தொழில்புரிபவர்களாக அல்லது தாயகத்தில் சிங்களஅரசுடன் இணைந்து ஏதோஒருதுறையில் இணைந்து செயற்பட்டவர்களாக இருப்பார்கள்.
இதுவரைகாலமும் தாயகத்திலுள்ள தமிழ்மக்களைப்பற்றி புலம்பெயர்ந்தநாடுகளில் நடைபெற்ற போராட்டங்களில் எவ்விதஅக்கறையுமின்றி இருந்தவர்களாக அல்லது தமிழீழவிடுதலைப்போராட்டத்திற்கு எதிரான கருத்தைஉடையவர்களாக செயற்பட்ட இவர்கள், இன்று தாயகமக்களின்மேல் திடீரென கரிசனையுள்ளவர்களாக வீதிஉலா வரப்போகிறார்கள்.
இராணுவரீதியில் விடுதலைப்போராட்டம் மழுங்கடிக்கப்படும்வரை சிங்கள அல்லது இந்தியஅரசுகளின் புலனாய்வுத்துறையினரால் காக்கவைக்கப்பட்ட இவர்கள், இன்று தாயகமக்களில் கரிசனை உள்ளவர்கள்போல மக்கள்முன் காட்சியளிக்கப்போகின்றார்கள்.
புலம்பெயர்வாழ் தமிழீழமக்களுடன் சிங்களஅரசானது தொடர்பைபேணி நிரந்தஅரசியல்தீர்வை வைக்கவேண்டும் என்ற அமெரிக்கஅரசின் அண்மைக்கால அறிவிப்பும், புலம்பெயர்நாடுகளில் நடைபெறும் எழுச்சிப்போராட்டங்களாலும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள சிங்களஅரசானது, தனக்கு ஆதரவான ஒருகுழுவை புலம்பெயர்நாடுகளில் ஏற்படுத்தமுனைகின்ற ஒருசெயற்பாடாகவே இதைக் கருதவேண்டியுள்ளது.
இவர்கள் அல்லது இக்குழுவானது, சிங்களஅரசுபுரிந்த படுகொலைகளைப்பற்றி வாய்திறக்கமாட்டார்கள்
எனவே, பல்லாயிரக்காண தமிழ்மக்களை கொடூரமாகப் படுகொலைசெய்து, இலட்சக்கணக்கான மக்களை ஆடு மாடுகளைப்போல் வதை முகாம்களில் அடிப்படைவசதிகளை மறுத்து வதைக்கின்ற, கொல்கின்ற சிங்களஅரசின் அடியாட்களான இவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்!
இவர்களின் கடந்தகால வரலாறு என்ன என்பதுபற்றியும் சிந்தியுங்கள்.
தமிழ்மக்கள்மேல் அக்கறைகொண்டவர்களாக நடிக்கின்ற இக்கூட்டம் புறப்படத்
தயார்! தயார்! தயார்!
ஏமாறுபவர்கள் இருக்கும் வரைக்கும், ஏமாற்றுபவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
6 Comments on “புலம்பெயர்வாழ் தமிழ்மக்களே! விழிப்பாக இருங்கள்”
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!



Azhiven vlimbil eruk’kum viveliyam mozhiyai metteaduthavan ELATH THAMIZHAN. Oru mozhi’en azhivai’kuuta thangatha enam entru azhikentrathu. Enivarum kaalam yethu azhinthalum ELAM VEALVATHEA ENI ELAK’KAI ERUK’KAT’TUM. ……Inganam…..ILAI…..
தாங்கள் குறிப்பிடுவது சரியே. சுயநலமிகள், வேடமிட்டு, அருகே வந்து, அன்பாகப் பேசி, அடிவருடி, வீழ்த்துவார்கள். இதைத்தான் சிங்களத் தலைமை உலக நாடுகளிடம் செய்து வருகிறது. அதனால்தான் இத்தனை துயரம். இனி அறிவு ஜீவிகளும் உலக நாடுகளில் பரப்புரை செய்ய வருவது தன்நலத்திற்காகவே என்பதை வீறு கொண்ட தமிழர்கள் அடையாளம் கண்டு உணர உங்கள் கட்டுரை உதவும்.
நன்றி
வழுதிக்கு நல்ல செருப்படி ஓன்று கொடுங்கள்
ஓடாத மானும் போராடாத மக்கள் இனமும் வெற்றி பெற்றதாய் வரலாறு இல்லை!
கு.கண்ணன்
நாம் கவனமா இருக்க வேண்டியது அவசியம், ஆனால் உண்மைய தமிழ் பற்றும் நாட்டு பற்றும் இருப்பவர்களையும் சந்தேகிக்க கூடாது. அதிகமானவர்களுக்கு இபோதுதான் விழிப்புணர்வு வந்துள்ளது. முப்பது வருசத்துக்கு முன்பு வந்தவர் பலர் இபோதுதான் விளித்து எழுந்துளார்கள்.
தமிழ் ஈழம் மலரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
எதை நம்புவது என்றே தெரியவில்லை. எல்லாம் தலை கீழாக நடக்குது. எப்படித்தான் தலைவர் இத்தனை காலமும் இவர்களை சமாளித்தவர் என்பது வியக்கத்தாக்க் விடயம்.