135 சிறப்பு முகாம்களில் 6,700 விடுதலைப் புலிகள் அடைத்து வைப்பு – செஞ்சிலுவைச் சங்கம்

REDCROSS2சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளில் 6,700 பேர் வரையில் 135 தனியான சிறப்பு தடுப்பு நிலையங்களில், தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் கீழ்மட்ட உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் மட்டுமே தமது தடுப்புக் காவலில் இருப்பதாக அறிவித்திருந்த சிறீலங்கா அரசு, அவர்களை மட்டுமே செஞ்சிலுவைச் சங்கம் பார்வையிட அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால் விடுதலைப் புலிகளின் நீதி, நிருவாக, அரசியல் பிரிவைச் சேர்ந்த பல மூத்த உறுப்பினர்கள், மற்றும் தாக்குதல் பிரிவுகளில் இருந்த பல முக்கிய உறுப்பினர்களும் சிறீலங்கா அரசினால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றோ, அன்றி அவர்களது விபரங்களை வெளியிடவோ, சிறீலங்கா அரசு மறுத்து வருகின்றது.

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Copyright © 2010 நெருடல். All rights reserved.