வவுனியா தடுப்பு முகாமில், இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் மரணம், பலர் காயம்
-
இவ் விடயம் 01. 07. 2009, (வெள்ளி),
தமிழீழ நேரம் 5:06க்கு பதிவு செய்யப்பட்டது
- செய்திகள்
செட்டிகுளத்தில் அமைந்துள்ள ராமனாதபுரம் மற்றும் ஆனந்தகுமாரசாமி முகாம்களைப் பிரிக்கும் முள்கம்பிகளுக்கூடாக, தடுத்து வைத்திருந்தவர்கள் வெளியே செல்வதைத் தடுக்கும் முயற்சியில், ஞாயிறு காலை, சிறிலங்கா இராணுவர்கள் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொலைசெய்யப்பட்டும் மற்றும் 2 பேருக்கு மேற்பட்டோர் காயப்படுத்தப்பட்டும் உள்ளார்கள், என வவுனியாச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில், ராமனாதபுரம் மற்றும் ஆனந்தகுமாரசாமி முகாம்களைப் பிரிப்பதற்கு வேலி அமைக்கப்பட்டபோது, தரைக்கு நேராகச் செல்லும் முள்கம்பிகளால் அமைக்கப்பட்டன. இரண்டு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள், இவ் முள்கம்பிகளுக்குள் ஒரு உள்புகும் வழியை அமைத்து பிரித்து வைக்கப்பட்டிருந்த தமது குடும்ப அங்கத்தவர்களைப் பார்த்து வந்தார்கள்.
இப்படியான உள்புகும் பாதை அமைக்கப்பட்ட போதெல்லாம், மக்களை இரண்டு முகாம்களுக்கும் இடையே மாறி மாறிச் செல்வதைத் தடுப்பதற்காக, அது பின்பு அடைக்கப்பட்டு வந்தது.
ஆனால், மக்கள் தொடர்ந்து தமது பாதையை இவ்வேலிகளுக்கூடாக அமைத்துச் மாறி மாறி சென்று வந்தார்கள். அதனால், அதிகாரிகளோ வழமையான வேலியை முள்கம்பி வேலிகளைப் பாவித்து குறுக்கும் நெடுக்குமாக அமைத்து மேலும் வலுப்படுத்தியிருந்தார்கள்.
இதனால், வெறுப்பும், ஆத்திரமும் கோபமுமடைந்த தடுத்து வைக்கப்பட்டிருந்தோர், பலப்படுத்திய முள்கம்பிகளுக்குள்ளாகவும் பிரித்து வைக்கப்பட்டிருந்த தமது உறவினரைப் பார்ப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை காலை முயற்சிசெய்த போதே சிறிலங்கா இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
|
நெருடல் நிர்வாகத்தின் ஓர் அன்பான வேண்டுகோள்
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை
தமிழில் எழுதவும். கீழுள்ள இந்த இணையத்தை பாவித்து ஆங்கில
உச்சரிப்பில் தமிழில் எழுதலாம்.
நன்றி |
| கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். |
Write a Comment
Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

