சிறிலங்கா மீது எந்தவொரு நாடோ, தனிநபரோ விசாரணைகள் மேற்கொள்ள முடியும் – சிலி

chileகடந்த யுத்தத்தின் போது, தமிழ் மக்கள் அதிகளவாக கொல்லப்பட்டது, தொடர்பாக சிறிலங்கா அரசே முதற்கட்ட விசாரணைகளை நடத்த வேண்டும் என சிலி வலியுறுத்தியுள்ளது. சர்வதேச குற்றவில நீதிமன்றத்தில் புதிதாக இணைந்து கொண்ட நிலையில் இதனை தெரிவித்துள்ள சிலி, ‘சிறிலங்கா அரசினால் அதனை செய்யமுடியாவிடின் விசாரணை தொடர்பாக எந்தவொரு அங்கத்துவ நாடோ, அல்லது எந்தவொரு தனி நபரோ விசாரணைக்கான கோரிக்கையை விடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
சிலி நாட்டின் தலைமை அமைச்சர் ஜோங் அன்ரனியா வியரா கல்லோ, சிறிலங்கா விவகாரத்தை பற்றி எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் இதனை வலியுறுத்தியதுடன், கடந்த யுத்தத்தை ‘தேசிய வாத கெரில்லா படைக்கு எதிரான யுத்தம்’ என்று வர்ணித்திருக்கிறார்.

சிறிலங்காவின் இடைத்தங்கல் முகாம்கள் ஐ.நா முகாம்கள் இல்லை – ஐ.நா பேச்சாளர்

இதேவெளை சிறிலங்காவின் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருப்பவர்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் இடம் குறித்த அறிக்கைகளுடன் ஐ.நாவின் மனிதாபிமான ஒருங்கிணைப்பு அலுவலகம் சர்ச்சைப்படுகிறதே என இன்னர்சிட்டி பிரஸ்ஸினால், எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள ஐ.நாவின் பேச்சாளர் மிசெல் மொண்டாஸ், சிறிலங்காவின் இடைத்தங்கல் முகாம்கள் ஐ.நாவின் முகாம்கள் அல்ல’ என தெரிவித்துள்ளார்.

ஐ.நா ஊடாக இம்முகாம்களுக்கு 50 சத வீதத்துக்கு மேல் நிதி அளிக்கப்பட்டால் அதனை ஐ.நாவின் முகாம்கள் என கருத முடியுமா என மீண்டும் எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘இது ஊகத்தை அடிப்படையாக கொண்ட கேள்வி’ என மெண்டாஸ் தெரிவித்துள்ளார்.

Tell a Friend
நெருடல் நிர்வாகத்தின் ஓர் அன்பான வேண்டுகோள்
 
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும். கீழுள்ள இந்த இணையத்தை பாவித்து ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதலாம்.
 

நன்றி

கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Spam Protection by WP-SpamFree

Copyright © 2010 நெருடல். All rights reserved.