இந்தியாவுடன் நேரடி தொடர்பினை ஏற்படுத்த உள்ளோம் – சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பத்மநாதன்

S Pathmanathanஇந்திய அரசுடன் தாம் நேரடி தொடர்பினை ஏற்படுத்தி இலங்கை தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளதாக தெரிவித்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது இந்தியா விதித்துள்ள தடையை நீக்குமாறு கோரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சர்வதேச தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,

இந்தியா இலங்கைக்கு வழங்கிய முழு உதவியின் அடிப்படையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள். அண்மைய போரில் இந்தியா, இலங்கைக்கு ஆதரவாக இருந்தது. முழமையான உதவியை இந்தியா இலங்கைக்கு வழங்கியது.

இலங்கையின் இராணுவ வெற்றிக்கு இந்தியா எந்தளவு உதவியது என்பது தொடர்பிலான முழு விபரங்களுக்கும் எங்களுக்கு தெரிந்தபோதிலும் நாங்கள் இந்தியாவை வெறுக்கவில்லை.

இந்தியாவின் பிரதேச சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டால் தமிழ் மக்கள்தான் இந்தியாவுக்கு முழுமையான பாதுகாப்பாக இருப்பார்கள் என நாங்கள் உறுதியாக கருதுகிறோம். குறிப்பாக சீனாவை கருத்தில் கொண்டால் நிச்சயம் தமிழ் மக்கள்தான் இந்தியாவுக்கு முழுப் பாதுகாப்பாக இருக்க முடியும்.

இதை இந்தியா ஒரு நாள் உணரும், ஈழத் தமிழர்களின் சுய நிர்ணயப் போராட்டத்தை ஆதரிக்க முன்வரும்.இந்திய அரசுடன் நான் நேரடித் தொடர்பை ஏற்படுத்தவுள்ளேன். ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளேன்.

அதேபோல விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்றார் அவர்.

Tell a Friend
நெருடல் நிர்வாகத்தின் ஓர் அன்பான வேண்டுகோள்
 
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும். கீழுள்ள இந்த இணையத்தை பாவித்து ஆங்கில உச்சரிப்பில் தமிழில் எழுதலாம்.
 

நன்றி

கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Spam Protection by WP-SpamFree

Copyright © 2010 நெருடல். All rights reserved.