படுகொலை செய்யப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் ‐IPU

logo_ipuகடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐ.பி.யூ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

29 நாடுகளில் சுமார் 300 பாராளுமன்ற உறுப்பினர்களது உரிமை மீறல் குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைலப் புலிகளுடன் நீண்ட காலமாக நடைபெற்ற சிவில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கை விசாரணைகள் குறித்த கால தாமதத்திற்கு எவ்வித நியாயங்களையும் முன்வைக்க முடியாதென குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட முடியாதென அரசாங்கம் தெரிவித்து வந்தது.

எனினும், எதிர்வரும் காலங்களில் இவ்வாறான நியாயங்களை முன்வைக்க முடியாதென ஐ.பி.யூவின் கனேடிய செனட்டர் ஷெரோன் கார்டெயார்ஸ் (Sharon Carstairs)
சட்டவிரோத கைதுகள் மனித உரிமை மீறல்களின் மூலமாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களைப் போன்றே தமது அரசியல் பணிகளை செவ்வனே மேற்கொள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் உரிமையளிக்கப்பட வேண்டுமென ஐ.பி.யூ கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைநகர் கொழும்பைவிட்டு வெளியேற அஞ்சுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களது உரிமைகளை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை வேண்டுமென மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tell a Friend
கீழே உள்ள கருத்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற வாசகர்களால் எழுதப்பட்டது. இக் கருத்துக்களுக்கு எவ்வகையிலும் நெருடல் இணையம் பொறுப்பேற்கமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம்.

Write a Comment

Gravatars are small images that can show your personality. You can get your gravatar for free today!

Copyright © 2010 நெருடல். All rights reserved.