Archive for the ‘முக்கிய செய்திகள் - மின்னஞ்சல்’ Category

பக்கம் 1, மொத்தம் 57 பக்கங்கள்12345...இறுதிப்பக்கம் »

தொடர் ஆய்வு: உலகப் பந்தில் தமிழீழம் – பாகம் 2

alt text
அரசுகள் எனும் மாமன்னர்கள்! 'தேசிய இனப்பிரச்சினைகள் அடிப்படையில் உள்நாட்டுப் பிரச்சனைகள் அல்ல, அவை சர்வதேசப் பிரச்சினைகளே' என்ற கூற்று மிகுந்த அர்த்தம் பொதிந்தது. தேசிய இனமுரண்பாடுகள் அனைத்துலகப் பரிமாணங்களைக் கொண்டவை என்ற அரத்தத்தில் மட்டுமல்ல, இவை நிலவி வரும் சர்வதேச ஒழுங்கினையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கும் வல்லமை கொண்டவை என்ற அர்த்தத்திலும் இக் கூற்று நோக்கப்படவேண்டும். மேலும்...

“ஒன்றாய்ச் சேர்தல் தொடக்கம் ஒன்றாயிருத்தல் முன்னேற்றம் ஒன்றாய்ச் செயற்படுதலே வெற்றி”

alt text
“ஒன்றாய்ச் சேர்தல் தொடக்கம் ஒன்றாயிருத்தல் முன்னேற்றம் ஒன்றாய்ச் செயற்படுதலே வெற்றி” இம்மடல் தங்கள் கைகளை நலமாக வந்தடையுமென நம்புகின்றேன். தலைவர் ஹென்றி போர்ட் அவர்களது மேலே தரப்பட்டுள்ள கூற்றை எண்ணிப் பார்க்கத் தமிழராகிய எமக்கு இப்பொழுதுள்ள நிலையிலும் சிறந்த நிலையொன்று இருக்க முடியாதென நான் நம்புகின்றேன். மேலும்...

சிறிலங்கா விவகாரம்: மகிந்தவுக்கும் தன் மருமகனுக்கும் விசுவாசமாக செயற்படும் பான் கீ மூன்!!

alt text
போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் சர்வதேச அழுத்தம் ஆகியவற்றிலிருந்து சிறிலங்காவை காப்பாற்றும் தொடர்ச்சியான முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டுவருவதன் பின்னணியில், மிகப்பெரிய குடும்ப அரசியலும் பரஸ்பரம் நட்பு பாராட்டும் நடவடிக்கைகளும் ஒழிந்திருக்கின்றன என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மேலும்...

Witness to Survival – CNN இன் ஆவணப்படம் 13ஆம் திகதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படும்

alt text
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்காப் படையினருக்கும் இடையில் நடைபெற்ற போரின் சாட்சியங்கள் குறித்து CNN தொலைக்காட்சி அரை மணித்தியால ஆவணப் படமொன்றை தனது ஒளிபரப்புச் சேவையில் காண்பிக்கவுள்ளது. இத்தொலைக்காட்சியின் தயாரிப்பாளரான Sara Sidnerஆல் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் எதிர்வரும் 13ஆம் திகதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு ஒளிபரப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...

அபிவிருத்தியா? தமிழர் தன்மானமா? பொதுத் தேர்தலும், ஆய்வுகளும் – ஒரு பார்வை

alt text
இலங்கையின்  பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர் தரப்புக்கள், குறிப்பாக தமிழ்த் தேசிய ஆதரவுச் சக்திகள் குறித்து அண்மை நாட்களில் பல வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருவதை அவதானித்துவரும் தமிழ் மக்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கு ஒரு  சில இணையங்களிலும், ஏனைய ஊடகங்களிலும் வெளியிடப்படும் ஆய்வுப் பத்திகளும், கருத்து வெளிப்பாடுகளுமே முக்கிய காரணியாக அமைந்து வருவதால், அது பற்றிப்பார்க்க வேண்டிய நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும்...

பிரான்சு மாநிலசபைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் பசுமைக்கட்சியின் வேட்பளாராக போட்டியிடுகின்றனர்

alt text
தேன்மதுரத்  தமிழோசை உலகமெல்லாம் ஒலிக்க  வழி செய்திடல் வேண்டும்’’ என்ற பாரதியின் கூற்றுக்கமைய…….. எதிர் வரும்  மார்ச் 14ம் திகதி பிரான்சு நாடு தழுவிய மாநிலதேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் Seine Saint Denis 93 மாநிலத்தில் இரண்டு தமிழர்கள் பசுமைக்கட்சியின்(Europe-ecologie)வேட்பளாராக போட்டியிடுகின்றனர். மேலும்...

தடுத்துவைக்கப்பட்டுள்ள எம் மக்களையும் போராளிகளையும் தொடர்ந்து சித்திரவதை செய்யும் இலங்கை இராணுவம் – இன்று தமிழ் நாட்டுக்கு தப்பிவந்த மூன்று பேர் தெரிவிப்பு

alt text
கடந்த வருடத்தில் தாயகத்தில் நடைபெற்ற பேரழிவு நடைபெற்று நீண்ட நாளைக்கு பின்னர் மூன்று தமிழ் அகதிகள் இந்தியாவுக்கு இன்று சென்றடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தினரின் கொடுமையான சித்திரவதைகளை தாங்கமுடியாமல் தப்பியோடி வந்ததாக இவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்...

மாறிவரும் சர்வதேச சூழ்நிலையும் மாறாத தமிழ்த்துவமும்

alt text
கடந்த வருடத்தில் தாயகத்தில் நடைபெற்ற பேரழிவும் அதனை தொடர்ந்தும் சிறிலங்கா அரசின் அகங்கார போக்கும் சர்வதேச மட்டத்தில் சில மாற்றங்களை தமிழர் தரப்புக்கு சார்பாக திரும்புவது போன்ற நிலைப்பாடுகளை அவதானிக்க கூடியதாகவுள்ளது. அதேவேளை பல பிரிவுகளாக தமிழர் தரப்புகள் பிளவுண்டு மீண்டும் 1980 களை நினைவூட்டுகின்றமையும் தமிழர்களின் கசப்பான பக்கங்களே. இவைபற்றிய அலசல்களாக விரிகின்றது இப்பத்தி. மேலும்...

மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுக்கல்லும் சிங்களப் இனவாதப் படைகளால் சிதைப்பு!!

alt text
வன்னிமண்ணின் மாபெரும் தமிழ் மன்னன் பண்டாரவன்னியன் நினைவுச் சின்னம் சிறீலங்காப் படையினரால் சிதைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் கற்சிலைமடுக் கிராமத்தில் 1803-08-31 ஆம் ஆண்டு மன்னன் பண்டாரவன்னியன் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்குடன் ஏற்பட்ட மோதலில் தோல்வி அடைந்தாதாக குறிப்பிட்டு குறித்த நினைவுக்கல் அதே காலப்பகுதியில் அமைக்கப்பட்டது. மேலும்...

‘துரோகி’ என்ற சொல்லை அரசியல் அகராதியிலிருந்து வீசிவிடுங்கள்! நடராஜா முரளிதரன்

alt text
‘இது எமது தலையில் நாமே தூர் வாரும் செய்கையாக அமைந்து விடும்’ என்ற தலைப்பில்  இணையத் தளமொன்றில் கட்டுரையொன்றை வாசிக்க நேர்ந்தது. நடைமுறை யதார்த்தத்திலிருந்து விலகிக் கற்பனையுலகில் ‘மண் கோட்டை’ ஒன்றை எழுப்புவதற்கான களமாகத் ‘தமிழீழ விடுதலைப் போராட்டம்’ என்ற சொல்லாடல் அமைந்து விடலாகாது என்ற முனைப்பே இதை வாசித்தவுடன் என்னுள் எழுகின்றது. மேலும்...
பக்கம் 1, மொத்தம் 57 பக்கங்கள்12345...இறுதிப்பக்கம் »
Copyright © 2010 நெருடல். All rights reserved.