Archive for the ‘விசேட செய்தி’ Category

பக்கம் 1, மொத்தம் 48 பக்கங்கள்12345...இறுதிப்பக்கம் »

உறவுகளே உங்கள் மௌனம் எதுவரைக்கும் – யாழிலிருந்து ஒரு குரல்

alt text
இலங்கைப்பாராளுமன்ற தேர்தல் என்றுமில்லாதவாறு வடகிழக்கு பகுதிகளில் சிறீலங்கா பேரினவாத அரசு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை சிதைப்பதில் மிகவும் வெற்றிகரமாகவும் ,பேரினவாத சிந்தனையுடனும் செயற்பட்டுவருவதை தெளிவாக காணமுடிகின்றது. மேலும்...

11000 புலிச்சந்தேக நபர்களையும் தொடர்ந்தும் சிறை வைக்க முடிவு! 11000 ஏக்கர் நிலத்தில் பண்ணை!!

alt text
தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 11000 விடுதலைப் புலிகள் போராளிகளையும் நீண்ட கால நோக்கில் சிறைப்படுத்தும் திட்டங்கள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்குமாறு சர்வதேச சமுதாயம் குரல் கொடுத்துவரும் நிலையில் அதனை முறியடிக்கும் விதமாக அரசினால் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. மேலும்...

தொடர் ஆய்வு: உலகப் பந்தில் தமிழீழம் – பாகம் 2

alt text
அரசுகள் எனும் மாமன்னர்கள்! 'தேசிய இனப்பிரச்சினைகள் அடிப்படையில் உள்நாட்டுப் பிரச்சனைகள் அல்ல, அவை சர்வதேசப் பிரச்சினைகளே' என்ற கூற்று மிகுந்த அர்த்தம் பொதிந்தது. தேசிய இனமுரண்பாடுகள் அனைத்துலகப் பரிமாணங்களைக் கொண்டவை என்ற அரத்தத்தில் மட்டுமல்ல, இவை நிலவி வரும் சர்வதேச ஒழுங்கினையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கும் வல்லமை கொண்டவை என்ற அர்த்தத்திலும் இக் கூற்று நோக்கப்படவேண்டும். மேலும்...

அபிவிருத்தியா? தமிழர் தன்மானமா? பொதுத் தேர்தலும், ஆய்வுகளும் – ஒரு பார்வை

alt text
இலங்கையின்  பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர் தரப்புக்கள், குறிப்பாக தமிழ்த் தேசிய ஆதரவுச் சக்திகள் குறித்து அண்மை நாட்களில் பல வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருவதை அவதானித்துவரும் தமிழ் மக்கள், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கு ஒரு  சில இணையங்களிலும், ஏனைய ஊடகங்களிலும் வெளியிடப்படும் ஆய்வுப் பத்திகளும், கருத்து வெளிப்பாடுகளுமே முக்கிய காரணியாக அமைந்து வருவதால், அது பற்றிப்பார்க்க வேண்டிய நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும்...

தடுத்துவைக்கப்பட்டுள்ள எம் மக்களையும் போராளிகளையும் தொடர்ந்து சித்திரவதை செய்யும் இலங்கை இராணுவம் – இன்று தமிழ் நாட்டுக்கு தப்பிவந்த மூன்று பேர் தெரிவிப்பு

alt text
கடந்த வருடத்தில் தாயகத்தில் நடைபெற்ற பேரழிவு நடைபெற்று நீண்ட நாளைக்கு பின்னர் மூன்று தமிழ் அகதிகள் இந்தியாவுக்கு இன்று சென்றடைந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தினரின் கொடுமையான சித்திரவதைகளை தாங்கமுடியாமல் தப்பியோடி வந்ததாக இவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்...

மாறிவரும் சர்வதேச சூழ்நிலையும் மாறாத தமிழ்த்துவமும்

alt text
கடந்த வருடத்தில் தாயகத்தில் நடைபெற்ற பேரழிவும் அதனை தொடர்ந்தும் சிறிலங்கா அரசின் அகங்கார போக்கும் சர்வதேச மட்டத்தில் சில மாற்றங்களை தமிழர் தரப்புக்கு சார்பாக திரும்புவது போன்ற நிலைப்பாடுகளை அவதானிக்க கூடியதாகவுள்ளது. அதேவேளை பல பிரிவுகளாக தமிழர் தரப்புகள் பிளவுண்டு மீண்டும் 1980 களை நினைவூட்டுகின்றமையும் தமிழர்களின் கசப்பான பக்கங்களே. இவைபற்றிய அலசல்களாக விரிகின்றது இப்பத்தி. மேலும்...

இராஜவரோதயம் சம்பந்தன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு ஒரு திறந்த மடல்

alt text
திரு. இராஜவரோதயம் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஆகியோருக்கு: கடந்த மே 2009 இற்கு பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள். மேலும்...

இந்தியாவுக்கு எதிரான போரில் அம்பாந்தோட்டை துறைமுகம் சீன கடற்படையின் தளம் ஆகும்? – பிரித்தானிய ஏடு ஆராய்கிறது

alt text
வர்த்தக மற்றும் கடல்சார் உடன்பாடுகளை வேறு நாடுகளுடன் மேற்கொள்வதன் மூலம்  தனது பழைய விரோதியாகிய இந்தியாவினைச் சுற்றி சீனா ஒரு வலையினைப் பின்னி வருகிறது. மேலும்...

நரி ஊருக்குள் வருவதே தப்பு…..ஊழையிட்டுக் கொண்டு வேறு வருகிறது

alt text
தேசவிரோத குழுவான ஈ.என்.டி.எல்.எப். கிளிநொச்சியில் தளம் அமைத்துள்ளமை விடைகான முடியாது மர்மமாக இருந்த பல வினாக்களிற்கு விடையளித்துள்ளது. தமிழர்களது வாழ்வும் விடுதலைப் போராட்டமும் முள்ளிவாய்காலில் சிதைக்கப்பட்டு எதிர்காலம் சூனியமாக்கப்பட்டதற்கு ஒத்தாசை புரிந்து துணைநின்று செயற்பட்ட ஈ.என்.டி.எல்.எப். தேசவிரோத குழுவினர் மீண்டும் கிளிநொச்சியில் தளம் அமைத்து செயற்பட அனுமதியளிக்கப்பட்டமை சிங்கள இந்திய அரசுகள் வழங்கிய பரிசாகும். மேலும்...

தமிழர் தாயக கொள்கையை பிரிட்டனில் உள்ளவர்கள் ஆதரிப்பதில் எந்த தடையும் இல்லை; விடுதலைப்புலிகளின் தடைகளை அகற்றுவதற்கும் தமிழ் மக்கள் விண்ணப்பிக்கலாம் – டேவிட் ஹன்சன்

alt text
தமிழர் தாயகக் கொள்கையை ஆதரிப்பதற்கு பிரிட்டனில் உள்ள தமிழர்களுக்கு உரிமை உள்ளது என்று அந்த நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான அமைச்சர் டேவிட் ஹன்சன் அறிவித்துள்ளார். அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பது சட்டவிரோதமானது என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும்...
பக்கம் 1, மொத்தம் 48 பக்கங்கள்12345...இறுதிப்பக்கம் »
Copyright © 2010 நெருடல். All rights reserved.