- 07. 05. 2010, 20:59
- செய்திகள், புகைப்படங்கள்
மீளக்குடியமர்ந்துள்ள தாம் முகாம்களிலேயே வாழ்ந்திருக்கலாம் என எண்ணுவதாக முல்லைத்தீவுப் பகுதியில் மீளக் குடியமர்ந்துள்ள மக்கள் தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரனிடம் கவலை வெளியிட்டுள்ளனர்.
இன்று முல்லைத்தீவிற்கான பயணத்தினை மேற்கொண்ட சுரேஷ் பிறேமச்சந்திரன் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
மேலும்...
பிரித்தானியாவில் நடைபெறும் நாடுகடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலில் மக்கள் திரண்டு வாக்களிப்பு நிலையங்களில் தங்கள் வாக்குகளை அளித்துவருகின்றனர்.
வரலாற்றுச்சிறப்பு மிக்க தேர்தலாக கருதப்படும் நாடுகடந்த தமிழீழ அரசிற்கான தேர்தல் இன்று உலகளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது.
மேலும்...
மாமனிதர் “தராகி” சிவராமின் 5ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு “தமிழர் சட்ட ஆலோசனைக் குழு” ஏற்பாட்டில் நேற்றிரவு லண்டனில் நடைபெற்றது.
மத்திய லண்டனிலுள்ள ஹோபோர்ன் (Holborn) பகுதியிலுள்ள றெட் லயன் சதுக்கத்திலுள்ள அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள், பல்துறை சார்ந்தோர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மேலும்...
இன்று (20.04.2010) பேர்லின் மாநகரில் எம் இன மக்களுக்காக புலம்பெயர்வாழ் தமிழ்மக்களால் பேரணி முன்னெடுக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட எம் ஆயிரமாயிரம் மக்களையும் அவர்களை காப்பதற்காய் தம் இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்களின் இறுதி கணங்களையும் தீயாய் நெஞ்சங்களில் சுமந்து பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து இவ் மாபெரும் பேரணி முன்னெடுக்கப்பட்டது:
மேலும்...
அந்நிய இராணுவத்தின் அடாவடித் தனத்தை எதிர்த்து, உண்ணாவிரதம் இருந்து, தனது உயிரை ஈகம் செய்த அன்னைபூபதி அம்மாவின் 22ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் நடைபெற்றிருந்தது.
மேலும்...
- 17. 04. 2010, 16:31
- புகைப்படங்கள்
தமிழீழத்தை உருவாக்க உலகில் உள்ள எந்த நாடும் உதவிக்கு வராது. நாமே அதனை உருவாக்க வேண்டும்.
தமிழீழத்தை உருவாக்குவதற்கு இந்திய அரசை உந்தித்தள்ளும் கட்சி ஒன்றே தமிழகத்தை ஆட்சிசெய்ய வேண்டும்.
அது தான் ஒரே வழி.
மேலும்...
27ம் திகிதி சனிக்கிழமை பி.பகல் 15.00 மணிக்கு பிரான்சின் தலைநகரான பாரிசில் பல்லின மக்களும், அரசஅரசசார்பற்ற அமைப்புக்களும் ஒன்றிணைந்து காலனித்துவ ஆட்சிக்கெதிராக மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலமும், ஒன்றுகூடலும் இடம்பெற்றிருந்தது.
மேலும்...
டென்மார்க்கில் தமிழீழ தனியரசை வலியுறுத்தி வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான மீள்வாக்கெடுப்பு: இன்று 32 நகரங்களில் நடைபெறுகின்றது.
மேலும்...
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் 27 ம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 5.00 மணிக்கு ஓவியக் கண்காட்சி Temple Bar காட்சிக் கூடத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
மேலும்...
ஈழத்தமிழினமே அன்னை மண் உலகம் இரண்டிலும் இனிநாங்கள் முன்னைவிட ஆயிரம் மூச்சோடு தலைநிமிர்வோம் ஈழ விடுதலைப்போர் தொடுப்போம் தொடர்வோம் சுதந்திரதாகம் என்று பிரான்சு பாரிசு புறநகர் பகுதியில் அமைந்துள்ள LSC மண்டபத்தில் 10.01.2010 ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 16.00 தமிழ் இளையோர் அமைப்பினரின் ஏற்பாட்டில்அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வும் சுதந்திரதாகம் நிகழ்வும் நடைபெற்றது.
மேலும்...